பொது செய்தி

இந்தியா

கொரோனா 2வது அலை தாக்கம் குறைகிறது?

Updated : மே 19, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மும்பை :ஒரு மாதத்துக்குப் பின், கொரோனா வைரசால், ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது; இது, இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வருவதற்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. பாதிப்பு அதிகரித்துள்ளதால், ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி, மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றுக்கான தேவை
கொரோனா 2வது அலை, குறை, புதிய பாதிப்பு ,சரிவு

மும்பை :ஒரு மாதத்துக்குப் பின், கொரோனா வைரசால், ஒரு நாளில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, மூன்று லட்சத்துக்கு கீழே குறைந்துள்ளது; இது, இரண்டாவது அலை பாதிப்பு குறைந்து வருவதற்கான புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. பாதிப்பு அதிகரித்துள்ளதால், ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசி, மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்து, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.


புதிய நம்பிக்கைதடுப்பூசி வழங்கும் பணியும் வேகப்படுத்தப் பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளால், ஒரு மாதத்துக்குப் பின், ஒரு நாளில் பதிவாகும் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.ஏப்., 21ம் தேதி, இரண்டு லட்சத்து, 95 ஆயிரத்து, 41 பேருக்கு தொற்று உறுதியானது. அதன்பின் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து, மூன்று லட்சத்துக்கு மேலாக இருந்தது. உச்சகட்டமாக நான்கு லட்சத்தையும் தாண்டியது.இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி, முந்தைய, 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, இரண்டு லட்சத்து, 81 ஆயிரத்து, 860 ஆக இருந்தது. வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் புதிய நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. அதே நேரத்தில் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பாதிப்பு அளவு அதிகமாகவே உள்ளது.


தடுப்பூசி தீவிரம்கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி, நாடு முழுதும், 18.3 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு உள்ளது.ஏற்கனவே உள்ள, 'கோவாக்சின், கோவிஷீல்டு' தடுப்பூசிகளுடன், ரஷ்யாவில் இருந்து வந்துள்ள, 'ஸ்புட்னிக் வி' தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மேலும் சில வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்படுத்தவும்
திட்டமிடப்பட்டுள்ளது.பாதிப்பு குறைந்து வருவது, தடுப்பூசி செலுத்துவது அதிகரித்து வருவது ஆகியவை, கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக விரைவில் முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.


பக்கவிளைவு குறைவு!மஹாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்த, 'சீரம்' நிறுவனம் தயாரிக்கும்,'கோவிஷீல்டு' மற்றும் தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, ' பாரத் பயோடெக்' நிறுவனம் தயாரிக்கும், 'கோவாக்சின்' தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த தடுப்பூசிகளால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த, ஏப்., 3ம் தேதி நிலவரப்படி, 6.87 கோடி, கோவிஷீல்டு; 67 லட்சம் கோவாக்சின் என, 7.54 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அதில், பக்க விளைவு ஏற்பட்டதாக, 23 ஆயிரம் பேர் குறிப்பிட்டனர். அதில், 700 பேருக்கு மட்டுமே சற்று தீவிர பாதிப்பு இருந்தது.

அதில், 26 பேருக்கு மட்டுமே, ரத்தக் கட்டு போன்ற தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அதாவது, 10 லட்சம் பேரில், 0.61 பேருக்கு மட்டுமே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது குறைவு. பிரிட்டனில், 10 லட்சத்தில், நான்கு பேருக்கும், ஜெர்மனியில், 10 பேருக்கும் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சர்வதேச மருத்துவ ஆய்வுகளின்படி, ரத்தக் கட்டு போன்ற தீவிர பாதிப்புகள், தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படுவதற்கு, 70 சதவீத வாய்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra balaji - Chennai,இந்தியா
18-மே-202116:03:11 IST Report Abuse
chakra balaji Except TN, Kerla, Parts of Karntaka and Maharashtra, no major testing for Covid. Last three days the quantum of testings were considerably very low, hence the positivity rate seemed to be on the lower side. The more tests, the higher the rate of covid. ,
Rate this:
Cancel
18-மே-202111:15:10 IST Report Abuse
தமிழ் நல்ல செய்தி.
Rate this:
Cancel
Ragul - Trichy,இந்தியா
18-மே-202109:24:55 IST Report Abuse
Ragul குப்பன்: சுமார் 139 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் நம்ம நாட்டுல 2% மக்களுக்கே கொரோனா இருக்காம் அது மட்டும் இல்லாம நாட்டில இறந்ததா சொல்லுற 2.75 லட்சம் பேருக்கும் தினசரி எரியூட்டுற, புதைக்குற கணக்கும் சம்பந்தமே இல்லையாம். இப்படி இருக்கும்போது தினசரி கொரோனா சோதனைய படிப்படியா குறைச்சு இப்ப 15.5 லட்சம் பரிசோதனை செஞ்சுட்டு கொரோனா பாதிப்பு குறையுதுனு வேற சொல்றாங்க எப்படிப்பா? சுப்பன்: அட விடுப்பா... இத கேட்டா கைது பண்ணி தேச பாதுகாப்பு சட்டம் பாய்ஞ்சிடும் ஜாக்கிரதை... குப்பன்: அய்யையோ... இந்தியால மோடி முயற்சினால கொரோனா ஒழிந்தது... மோடி வாழ்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X