தேர்தல் கமிஷனர் நியமனம்: தனிக்குழு அமைக்க வழக்கு

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
புதுடில்லி;'தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, தனி அதிகாரமுள்ள, சுதந்திரமான ஒரு குழுவை அமைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் மாற்றம் கோரி, ஜனநாயக சீர்திருத்தத்துக் கான சங்கம் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:அரசியல் சாசனத்தின்படி, ஆரோக்கியமான

தேர்தல் கமிஷனர், நியமனம்,தனிக்குழு,  வழக்கு

புதுடில்லி;'தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, தனி அதிகாரமுள்ள, சுதந்திரமான ஒரு குழுவை அமைக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் மாற்றம் கோரி, ஜனநாயக சீர்திருத்தத்துக் கான சங்கம் என்ற அமைப்பு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:அரசியல் சாசனத்தின்படி, ஆரோக்கியமான ஜனநாயகத்தில், தேர்தல் கமிஷன், ஒரு சுதந்திரமான, அரசியல் மற்றும் நிர்வாக தலையீடு இல்லாத அமைப்பாக இருக்க வேண்டும்.


latest tamil news
அதன் கமிஷனர்கள் நியமனமும் அவ்வாறே, எந்தத் தலையீடும் இல்லாமல் இருக்க வேண்டும்.ஆனால், தற்போதைய நடைமுறை அதை மீறுவதாக உள்ளது. மத்திய அரசே இவர்களை நியமிக்கிறது. இதன் வாயிலாக மத்திய அரசு நிர்வாகத்தின் ஒரு கிளையாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.

அதனால் தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, சுதந்திரமான, ஒரு தனிக் குழுவை உருவாக்க வேண்டும். சட்டக் கமிஷன் பரிந்துரைத்துள்ளபடி, ஜனாதிபதி தலைமையில், பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
18-மே-202112:01:33 IST Report Abuse
duruvasar இந்த குழுவில் வெளிநடப்பு செய்வதற்காக மட்டுமே ஒருவரை இடம்பெற செய்யவேண்டுமா என யோசியுங்க.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-மே-202111:37:52 IST Report Abuse
sankaseshan TN Seshan one man commissnor worked fearlessly . PM PV N Rao diluted his power by appointing two more members . Upa sarkar used it to their advantages by appointing yes men . SC should reject this request.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-மே-202111:26:03 IST Report Abuse
sankaseshan The group filled this petition should be penalized for wasting time of courts.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X