ஊழல் வழக்கில் சி.பி.ஐ., அதிரடி: மேற்கு வங்க அமைச்சர்கள் கைது

Updated : மே 19, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (12+ 54)
Share
Advertisement
கோல்கட்டா :'நாரதா' ஊழல் வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ., உட்பட நான்கு பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2014ல், திரிணமுல் காங்., ஆட்சியின் போது, 'நாரதா நியூஸ்' என்ற செய்தி இணையதளத்தை சேர்ந்த மாத்யூ சாமுவேல் என்பவர், ஆட்சி மற்றும்
ஊழல் வழக்கு, சி.பி.ஐ., ,மேற்கு வங்கம், அமைச்சர்கள், கைது

கோல்கட்டா :'நாரதா' ஊழல் வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இரு அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ., உட்பட நான்கு பேரை, சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, 2014ல், திரிணமுல் காங்., ஆட்சியின் போது, 'நாரதா நியூஸ்' என்ற செய்தி இணையதளத்தை சேர்ந்த மாத்யூ சாமுவேல் என்பவர், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழலை அம்பலப்படுத்த முயற்சித்தார்.

இதற்காக போலியான நிறுவனம் ஒன்றை பதிவு செய்தார். அந்நிறுவனத்துக்கு சில சலுகைகள் வழங்க, திரிணமுல் காங்., அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை அணுகி, அவர்களுக்கு சில லட்சம் ரூபாயை லஞ்சமாக வழங்கினார்.

அவர்களுடனான உரையாடல் மற்றும் லஞ்சம் வழங்கிய காட்சிகளை ரகசியமாக படம் பிடித்தார். இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்த, 'நாரதா நியூஸ் வீடியோ' 2016 சட்டசபை தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்டது. அப்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களாக இருந்த திரிணமுல் காங்., தலைவர்கள் இந்த வழக்கில் சிக்கினர். ஆனாலும், 2016 சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., வெற்றி பெற்றது. இந்த ஊழல் வழக்கு, 2017ல், சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, ஐ.பி.எஸ்., அதிகாரி எஸ்.எம்.எச்.மீர்ஸா, 2019ல் கைது செய்யப்பட்டார்; பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய மம்தா அரசில் பதவி வகித்து வரும், திரிணமுல் காங்.,கை சேர்ந்த அமைச்சர்கள் பிர்ஹத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் எம்.எல்.ஏ., மதன் மித்ரா மற்றும் திரிணமுல் காங்.,ல் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்துள்ள, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ., அனுமதி கோரியது.

இதற்கு கவர்னர் ஜக்தீப் தன்கர் சமீபத்தில் அனுமதி வழங்கினார். இதையடுத்து, நான்கு பேரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இந்த ஊழல் வழக்கில் கைதாகி உள்ள நால்வரும், 2014ல் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.


முதல்வர் ரகளைஅமைச்சர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, கோல்கட்டாவின், 'நிஜாம் பேலஸ்' கட்டடத்தில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்திற்கு முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று காலை, 11:00 மணிக்கு வந்தார். அவரை அங்கிருந்து கிளம்பி செல்லும்படி அதிகாரிகள் வலியுறுத்தினார்.

''இங்கிருந்து என்னை அப்புறப்படுத்த வேண்டுமானால், நீங்கள் என்னை கைதுதான் செய்ய வேண்டும்,'' என்றார். மம்தாவின் தலையீடு, விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் குறித்து, மேற்கு வங்க சட்டசபை சபாநாயகர் பிமன் பானர்ஜி கூறியதாவது:
அமைச்சர்கள் மற்றும் ஒரு எம்.எல்.ஏ.,வை கைது செய்ய என்னிடம் அனுமதி கோரி, சி.பி.ஐ., தரப்பில் இருந்து முறைப்படி கடிதம் அளிக்கப்படவில்லை. நான் அலுவலகத்தில் இருக்கும்போதே, எதற்காக கவர்னரை சந்தித்து அனுமதி கோரினர் என்பது தெரியவில்லை. இந்த அனுமதி சட்ட விரோதமானது. இந்த அனுமதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ள கைது நடவடிக்கையும் சட்ட விரோதமானது.

இவ்வாறு அவர் கூறினார்.


அராஜக செயல்!சி.பி.ஐ., அலுவலகம் மீது, திரிணமுல் காங்., தொண்டர்கள் கற்களை வீசி அராஜகத்தில் ஈடுபடுவதை, போலீசார் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர். ஒவ்வொரு நிமிடமும் நிலைமை மோசமடைந்து வருகிறது. முதல்வர் மம்தா உடனடியாக தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும்.ஜக்தீப் தன்கர்மேற்கு வங்க கவர்னர்


தொண்டர்கள் ஆவேசம்!


மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும், கோல்கட்டாவில் உள்ள, சி.பி.ஐ., அலுவலகத்தில் நுாற்றுக்கணக்கான திரிணமுல் காங்., தொண்டர்கள் குவிந்தனர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பு வீரர்கள் மீது கற்கள் மற்றும் செங்கல்களை வீசினர்.பல்வேறு மாவட்டங்களிலும், திரிணமுல் காங்., தொண்டர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் நேற்று ஈடுபட்டனர்.
திரிணமுல் காங்., செய்தி தொடர்பாளர் குணால் கோஷ் கூறியதாவது:
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்ததை, பா.ஜ.,வால் இன்னும் ஏற்க முடியவில்லை. அதற்கு பழி வாங்கவே, இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (12+ 54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-மே-202112:25:26 IST Report Abuse
Lion Drsekar தலைவனை கட்சியில் இருந்து வெளியேற்றுதற்கு தொண்டன் தீ குளிர்ப்பார்கள் இறப்பார்கள் ஆனால் தேர்தல் என்று வந்தவுடன் அதே தலைவர் நீக்கிய கட்சியுடன் தேர்தல் நேரத்தில் உறவு கொண்டாடி பதவி பெறுவது, பல சட்டப்பிரிவுகளின் கைது என்று செய்திவரும், நீதிமன்றமும் பாவம் தன கடமையை அழகாக செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்றுவது போன்றவைகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும், எல்லா புகழும் இறைவனுக்கே, வந்தே மாதரம்
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
18-மே-202111:42:55 IST Report Abuse
sahayadhas மறுபடியும் 13 அப்பாவிகளை காவு கொடுக்க தீர்மானிச்டாங்க
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
18-மே-202110:29:40 IST Report Abuse
seshadri CBI action is waste. None of the top political leaders are punished and put behind bars. Who ever convicted come out on bail and lead their life happily with all facilities in hospital or in their house example is Lalu prasad yadav. The persons who are under trial can prolong the same by means of vaaytha and lead a happy life people like chidambaram his son karthi dayanidhi maran, kanimozhi etc.The judges in the court also more generous in granting vaaydha because most of the judges came to that post by the corrupted people like the above. India need dictatorship for some time atleast for a period of 10 years minimum
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X