அரசியல் செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க.,வின் மோதல் போக்கு துவங்கியாச்சு!

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (141+ 109)
Share
Advertisement
தமிழகத்தில், மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க.,வின் மோதல் போக்கு துவங்கியுள்ளது. மத்திய அரசு நேற்று நடத்திய, புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்காமல், தமிழக அரசு புறக்கணித்தது. அமைச்சர்கள் மட்டத்தில் ஆலோசனை நடத்தாமல், அதிகாரிகள் அளவிலான கூட்டம் நடத்தியதற்கு கடுப்பை காட்டியுள்ளது.புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்த, மத்திய அரசு சார்பில், மாநில
மத்திய அரசு,தி.மு.க.,மோதல் , துவங்கியாச்சு!

தமிழகத்தில், மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க.,வின் மோதல் போக்கு துவங்கியுள்ளது. மத்திய அரசு நேற்று நடத்திய, புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்காமல், தமிழக அரசு புறக்கணித்தது. அமைச்சர்கள் மட்டத்தில் ஆலோசனை நடத்தாமல், அதிகாரிகள் அளவிலான கூட்டம் நடத்தியதற்கு கடுப்பை காட்டியுள்ளது.

புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்த, மத்திய அரசு சார்பில், மாநில அரசுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, மாநிலங்களின் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. கல்வித் துறை அமைச்சர்களையும் அழைக்க வேண்டும் என்று, தமிழக அரசு சார்பில், 'இ - மெயில்' அனுப்பப்பட்டது. அதற்கு, மத்திய அரசு தரப்பில் இருந்து எவ்வித பதிலும் இல்லாததால், அந்தக் கூட்டத்தை புறக்கணிக்க, தமிழக அரசு தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. அதனால், தமிழக கல்வித்துறை அதிகாரிகள், நேற்று அந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.


'இ - மெயில்' அழைப்புஇது குறித்து, நேற்று திருச்சியில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:கடந்த சில நாட்களுக்கு முன், புதிய கல்வி கொள்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி, ஆலோசனை நடத்தப் போவதாகவும், அதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசிடம் இருந்து, இ - மெயில் மூலம் அழைப்பு வந்தது. இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவித்தோம். அவர், 'புதிதாக தேர்வு செய்யப்பட்ட அரசில் உள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு தெரிவிக்காமல், கல்விக் கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும் என்று அதிகாரிகளை மட்டும் அழைத்திருப்பது, கூட்டாட்சி தத்துவத்துக்கு வேட்டு வைப்பது போல் உள்ளது. 'எனவே, கல்வித்துறை அமைச்சரும், ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்' என்று தெரிவித்து, மத்திய அரசுக்கு, இ - மெயில் அனுப்பினார்.இதுவரை எவ்வித பதிலும் வரவில்லை. அதனால், மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்து விட்டோம் என்று சொல்வதை விட, கலந்து கொள்ளவில்லை.

இது, அரசியல் செய்வதற்கான தளம் இல்லை; மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது. கடந்த, 2019ல், புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, மத்திய அரசு கருத்துக்களை கேட்டது. 2020 ஜூலை, 14ம் தேதி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், புதிய கல்விக் கொள்கையின் சாதக, பாதகங்கள் பற்றி தெரிவித்தார். அதில், '3, 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது, சிறு வயதில் அவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்' என்றுகூறியிருந்தார். முதல்வராக அண்ணாதுரை இருந்தபோது கொண்டு வரப்பட்ட, இரு மொழி கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக, மும்மொழிக் கொள்கையை கொண்டு வர முயற்சிக்கிறது என்றும், குலக்கல்வி திட்டத்தை திணிக்கப் பார்க்கிறது என்றும் தெரிவித்து இருந்தார்.அதையே, தி.மு.க., - எம்.பி.,க்களும், பார்லிமென்டில் கூறினர்.
கருத்துக்கள்ஆனால், தி.மு.க., தரப்பில் தெரிவித்த கருத்துக்கள் எதையும் சேர்த்து, திருத்தம் செய்யாமல், மத்திய அரசு நினைத்ததை மட்டுமே வெளியிட்டு இருந்தது.மத்திய அரசின் ஆலோசனை கூட்டத்தில், தமிழக அமைச்சர் பங்கேற்றால் தான், தி.மு.க., தரப்பிலான கருத்தை பதிவு செய்ய முடியும் என்பதற்காக, அனுமதி கேட்கப்பட்டது.அதற்கு எவ்வித பதிலும் இல்லாததால், அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.மத்தியில் ஆட்சி செய்பவர்கள், 'இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு குழந்தைகள் என்ன படிக்க வேண்டும் என்று முடிவு செய்வோம்' என்கின்றனர்.

தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களுக்கு, புதிய கல்விக் கொள்கை சரிவராது. மாநில அரசுக்கு என்ன தேவையோ, அதை செயல்படுத்துவதற்காக, கொள்கையில் இருந்து பின்வாங்காமல், தமிழக அரசு கடைசி வரை போராடும். இதற்காக, மத்திய அரசுடன் சண்டை போடும் விதமாக இல்லாமல், கருத்துக்களை சொல்லும் விதமாகவே செயல்பாடு இருக்கும்.ஒரு சில நாட்களில், மத்திய அரசு தரப்பில், புதிய கல்விக் கொள்கை பற்றி ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்தால், கவுரவம் பார்க்காமால், தமிழக அரசின் கருத்துக்களை முன்வைக்க தயாராக உள்ளோம்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
அடுத்த மாதம் அமல்?அனைத்து மாநில கல்வித்துறை செயலர்களுடன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரி யால் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தும் பணியை அடுத்த மாதம் துவங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பணி மாதம் ஒரு முறையும், காலாண்டு அடிப்படையிலும் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் காலக்கெடு வழங்கப்பட்டு, அதற்குள் அந்த பணியை செய்து முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. பணிகளை கண்காணிக்க, உயர் கல்வித்துறை அதிகாரிகள் தலைமையிலான பணிக்குழு அமைக்கப்பட உள்ளது.திட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், அதற்கு பொறுப்பான மாநில மற்றும் மாவட்ட அளவிலான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, கல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள் அளவில் இந்த கொள்கைகளை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


அறிக்கை தயாரிக்க அரசு உத்தரவு!
புதிய கல்வி கொள்கையில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து, அறிக்கை தயாரிக்குமாறு, பள்ளி கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.புதிய கொள்கையில், எந்தெந்த அம்சங்களை, தமிழகத்தில் அமல்படுத்த முடியாது; மொழிக்கொள்கை, பாடத்திட்டம், பயிற்று முறை, தேர்வுகள், பணி நியமனங்கள் போன்ற, எந்த அம்சங்களில், தமிழகத்தின் கொள்கையில் இருந்து, தேசிய கல்வி கொள்கை எவ்வாறு மாறுபடுகிறது என்று, குறிப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த விபரங்களை தொகுத்து, மத்திய அரசுக்கு அறிக்கையாக அனுப்ப, தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-


பிளஸ்2 தேர்வு எப்போது?மகேஷ் கூறியதாவது:தமிழகத்தில், பிளஸ் 2 தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும். எப்போது என்பது குறித்து, முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். மாணவர்கள் தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும். மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, 'நீட்' தேர்வை ரத்து செய்வது, எங்களது முதன்மையான நோக்கம். எனவே, தமிழக சட்டசபையில், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை, எம்.எல்.ஏ., உதயநிதி கொண்டு வருவார். ஏற்கனவே, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருந்தாலும், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (141+ 109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
21-மே-202117:59:08 IST Report Abuse
K E MUKUNDARAJAN ஏற்கனவே ஒரு வருடம் வீணாகிவிட்டது. கோராநா கோராநா என்று ஒரு வருடம் வீணாகிவிட்டது. நடக்கப்போகும் தேர்வு எந்த வருடத்தியது என்று கூட புரியவில்லை. கல்வி, பாதுகாப்புத்துறை, விவசாயம் போன்ற துறைகளை கொராணா என்று கூறி தள்ளிப்போடக்கூடாது.
Rate this:
Cancel
Thiagharajan Lambotharan - chennai,இந்தியா
21-மே-202113:13:11 IST Report Abuse
Thiagharajan Lambotharan இப்போது நாட்டில் என்ன விதமான சூழல் நிலவுகிறது. கொரோனாவால் அதிக உலகிலேயே அதிக உயிரிழப்புகள், தடுப்பூசி தட்டுப்பாடு, மருத்துவமனைகள் நிரம்பி வழியும் சூழலில் இந்த புதிய கல்வி கொள்கை குறித்த ஆலோசனை அவசியம்தானா? இது பற்றி எழுதாமல் ஏதோ அவசியமான ஒன்றை தமிழக அரசு தட்டி கழித்து விட்டதுபோல் கருத்தியல் உருவாக்க முயல்கிறீர்கள்.
Rate this:
Cancel
P Ravindran - Chennai,இந்தியா
20-மே-202118:42:24 IST Report Abuse
P Ravindran தகுதி இல்லாதவரை போட்டால் இதுதான் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X