பொது செய்தி

இந்தியா

கேதார்நாத் கோவில் திறப்பு ; மோடி சார்பில் முதல் பூஜை

Updated : மே 17, 2021 | Added : மே 17, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
டேராடூன் : பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி சார்பில், முதல் பூஜை நடந்தது.உத்தரகண்டில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கேதார்நாத் கோவில், ஆறு மாதங்களுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த ஆண்டும், கோவில் திறப்பு விழா பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

டேராடூன் : பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் நேற்று திறக்கப்பட்டது. பிரதமர் மோடி சார்பில், முதல் பூஜை நடந்தது.



latest tamil news



உத்தரகண்டில் முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கேதார்நாத் கோவில், ஆறு மாதங்களுக்குப் பின் நேற்று திறக்கப்பட்டது. கொரோனா காரணமாக இந்த ஆண்டும், கோவில் திறப்பு விழா பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்றனர். அவர்கள் வேத மந்திரங்கள் ஓதி, வழிபாடு நடத்திய பின், கோவில் நடை திறக்கப்பட்டது. அதன் பின், லிங்க வடிவில் காட்சி அளிக்கும் கேதாரீஸ்வரருக்கு, பிரதமர் மோடி சார்பில் முதல் சிறப்பு பூஜை நடந்தது.


latest tamil news



முதல்வர், தீரத் சிங் ராவத் கூறுகையில், ''கேதார்நாத் கோவில் நடை திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியத்தை அருளும்படி பிரார்த்தனை செய்கிறேன்,'' என்றார். கேதார்நாத் கோவில், பனிப்பொழிவு காரணமாக ஆண்டுதோறும் நவம்பரில் மூடப்பட்டு, அடுத்த ஆண்டு, மே மத்தியில் திறக்கப்படுவது வழக்கம். கோவிலை மூடும்போதும், திறக்கும்போதும் சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். கோவில் மூடப்படும் போது அர்ச்சகர்கள், கேதாரீஸ்வரர் சிலையை எடுத்துச் சென்று, மலையடிவாரத்தில் உள்ள உக்கிமடத்தில் வைப்பர்.

அங்கு, தினமும் பூஜை நடக்கும். கேதார்நாத் கோவிலை திறக்கும் போது, மீண்டும் கேதாரீஸ்வரர் சிலை அங்கு வைக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,பஹ்ரைன்
18-மே-202111:35:37 IST Report Abuse
sahayadhas மூன்றாம் அலைக்கு தயாராகிறது.
Rate this:
Cancel
Rajasekharan - Chennai,இந்தியா
18-மே-202108:43:37 IST Report Abuse
Rajasekharan ஐயா சாமி என் இமேஜ் காப்பாத்தப்ப்பா
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
18-மே-202103:26:38 IST Report Abuse
Venkatakrishnan இப்போ இது ரொம்ப முக்கியமா? இதுவரைக்கும் செஞ்ச பூஜை புனசாகரத்துக்கே ஒரு முன்னேற்றமும் காணோம்... பூஜையை மாட்டும் பண்ணிட்டு கேமரா முன்னாடி உணர்ச்சிபொங்க ஆக்ட்டிங் கொடுத்தா மட்டும் எல்லாம் வந்துமா, இல்ல கொரோனாதான் கட்டுப்படுமா? காமெடி சங்கீஸ்...
Rate this:
mukundan - chennai,இந்தியா
18-மே-202111:01:45 IST Report Abuse
mukundanதம்பி ரொம்ப பொங்குது....
Rate this:
vivek c mani - Mumbai,இந்தியா
18-மே-202115:57:51 IST Report Abuse
vivek c maniநீங்கள் பூஜை செய்கிற இத்தாலி, யு கே , அமெரிக்கா வை விட இந்தியர்கள் மிகவும் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இதுவரை செய்த பூஜை பலன் கொடுத்து தான் உள்ளது. கூறிய மற்ற நாடுகளின் மக்கள் தொகையை கணக்கில் கொண்டால் நம் நாட்டில் உயிரிழந்தோர் 40 லட்சத்தை தாண்டி இருக்க வேண்டும். அதாவது 10% கும் குறைவே இந்தியாவில்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X