சுட்டெரித்த வெயிலை தணித்த மழையால், நகரம் கொஞ்சம் 'குளுகுளு'வென இருக்க, மித்ராவுக்கு போன் செய்த சித்ரா, ''என்னடி பண்ணிட்டிருக்கே...'' என்றாள்.''அக்கா... இப்பதான் டிபன் சாப்பிட்டேன். நீங்க சாப்ட்டீங்களா?'' பதில் சொன்ன மித்ரா, ''அக்கா, மினிஸ்டர் எங்க போனாலும் கட்சிக்காரங்க கூட்டமா சேர்ந்து அலப்பறை பண்றாங்களாம்...''''கொரோனா பரவும்ங்கற பயம் கொஞ்சம் கூட இல்லாம, மினிஸ்டர்கிட்ட நல்ல பேரு வாங்கணும்னு, ஆய்வுக்கு போற இடத்துக்கெல்லாம் கட்சிக்காரங்க கூட்டமா போய், 'போட்டோ' எடுக்கறாங்க''''இதனால, தொற்று பரவிடுமோன்னு, அதிகாரிங்க பயப்படறாங்க. மந்திரிகிட்ட சொல்லவும் முடியாம, விழுங்கவும் முடியாம தவிக்கிறாங்களாம்'' என்றாள் மித்ரா.''தகப்பனுக்கு பாடம் சொன்ன தனயன் பேர் கொண்ட மினிஸ்டர் இத புரிஞ்சுகிட்டு, கட்சிக்காரங்களுக்கு 'அட்வைஸ்' பண்ணா நல்லா இருக்கும்'' என்ற சித்ரா, ''கொரோனா ஊரடங்கால், கல்யாணத்துக்கு 50 பேர் மட்டுமே இருக்கோணும்னு அரசு அறிவிச்சிருக்கு...''''ஆனா, இத யாரும் மதிக்கறதில்ல. இப்ப பாரு, போன வாரம், வேலம்பாளையத்துல இருக்கற ஒரு மண்டபத்துல நடந்த கல்யாணத்துல, ஆயிரக்கணக்கில் மக்கள் வந்துட்டு போயிருக்காங்க. இத கண்டுக்காம இருக்க, சம்பந்தப்பட்ட ஏரியா போலீஸ், ஹெல்த் டிபார்ட்மென்ட்டுக்கு 'நல்லாவே' கவனிச்சிட்டாராம், கல்யாணம் நடத்திய வி.ஐ.பி.,'' விளக்கினாள் சித்ரா.''அரசு அதிகாரிகளே இப்படி நடந்துகிட்டா, கொரோனாவை எங்க போய் ஒழிக்கிறது. தி இஸ் டூ மச்'ங்க்கா. சிட்டியிலுள்ள சத்தமில்லா பல இடத்தில இப்படி நடக்கறதா தகவல் வந்துட்டேதான் இருக்குது,'' கோபமாக சொன்னாள் மித்ரா.''சேதி சொல்ற டிபார்ட்மென்ட்க்கு, நம்ம மாவட்டத்தை சேர்ந்தவர் மினிஸ்டர் ஆகிட்டதால, அவரோட 'ரெக்கமண்டேஷன்'ல, இங்க வர்றதுக்கு பலரும் காய் நகர்த்திட்டு இருக்காங்களாம் மித்து,'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''ஆனாலும், நல்ல ஆபீசரா வந்துட்டா பரவாயில்ல மித்து. 'சாமி' மினிஸ்டர், போன வாரம் காசியில வாசி ஊரிலுள்ள ஜி.ஹெச்சுக்கு ஆய்வு பண்ண வந்தாரு. அவருக்கு பி.எஸ்.ஓ.,வா வந்த போலீஸ் ஆபீசர பார்த்ததும், அங்க இருந்த மத்த போலீஸ்காரங்க 'ஷாக்' ஆகிட்டாங்களாம்,''''ஏங்க்கா, அவருக்கு என்ன?''''நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி, மங்களகரமான ஸ்டேஷன் லிமிட்ல நடந்த ஒரு கொலையை, தற்கொலைன்னு மூடி மறைச்ச விவகாரத்துல, அவர ஊட்டிக்கு துாக்கியடிச்சாங்க. இப்ப பாத்தா, மினிஸ்டருக்கே பாதுகாப்பு ஆபீசரா போஸ்டிங் வாங்கிட்டாரு,'' என்றாள் சித்ரா.அப்போது, மித்ராவின் மொபைல் போனுக்கு, 'தேவராஜ்' என்ற பெயரில், அழைப்பு வர, அதனை 'கட் செய்த மித்ரா, ''என்னதான் ஊரடங்கு போட்டாலும், 'சரக்கு' விற்பனை ஜோரா நடக்குதுன்னு எல்லாருமே சொல்றாங்க்கா,'' என்றாள்.''ஆமான்டி, சிட்டிக்குள்ள, 'பார்' இருக்க ஓட்டல்கள்ல, மறைமுகமான அறை ஒன்றில், 'சரக்கு' குடிக்க ஏற்பாடு செஞ்சிருக்கறாங்க. இது போலீசுக்கும் தெரிஞ்சதும், உடனே போய், 'டபுள்' மடங்கா, மாமூல் வாங்கிக்கிட்டு, வழக்கம் போல 'ஸ்லீப்பிங் மோடு'க்கு போயிட்டாங்க... ''''அக்கா... இதே மாதிரி தான் காங்கயத்திலும் நடக்குது. டூவீலர்ல வந்த பல பேரு பெட்டி, பெட்டியா 'சரக்கு' வாங்கிட்டு போயிருக்காங்க. இதப்பார்த்த போலீஸ்காரங்க, பாட்டில்களை பறிமுதல் செஞ்சு, 'சும்மா' ஒரு 'கேஸ்' போட்டாங்க,''''ஆனா, விஷயம் என்னன்னு கேட்டீன்னா, புடிச்ச பாட்டில்களில், கொஞ்சமா கணக்கு காமிச்சிட்டு, 'பைக்'குகளையும் தங்களோட 'கஸ்டடி'யில வச்சுகிட்டாங்களாம். இதனால, என்ன பண்றதுன்னு தெரியாம, சிக்கினவங்க முழிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.''மித்து ஒன் மினிட்'' என்ற சித்ரா தண்ணீர் குடித்து விட்டு, பேச்சை தொடர்ந்தாள்.''தோல்வியை பத்தி கவலைப்படாம, கார்ப்ரேஷன் எலக்ஷன்ல, மேயர் ஆகிடனும்னு, 'குண'மான எக்ஸ்., சத்தமில்லாம காய் நகர்த்திட்டு இருக்காராம்''''அதுக்காக, கார்ப்ரேஷன்ல இருக்கற, ரெண்டு வார்டுல தான் சூரியக்கட்சிக்கு ஓட்டு அதிகமாக கிடைச்சிருக்கு. மத்த வார்டுகள்ல, நமக்கு தான் அதிகமாக ஓட்டு விழுந்திருக்குன்னு, அவரோட விசுவாசிகள், 'டேட்டா' கலெக்ட் பண்ணி கொடுத்து, உசுப்பேத்திட்டு இருக்காங்க,'' என்றாள்.''ஏற்கனவே ஒரு எலக்ஷன் நடத்தினதால தான், கொரோனா பரவுச்சுன்னு சொல்றாங்க. இதுல, உள்ளாட்சி எலக்ஷன் வேறயா. 'லோக்கல் பாலிடிக்ஸ்'ஐ விட்டுட்டு, கொரோனாவை 'கன்ட்ரோல்' பண்றது தான் புத்திசாலித்தனம்'' என்றாள் மித்ரா.''கொரோனாவை 'கன்ட்ரோல்' பண்றதுல்ல மாவட்ட ஆபீசர் மேல, மினிஸ்டர் அதிருப்தில இருக்காங்களாம். முதல் அலையின் போது, அவர் காட்டின 'ஸ்பீடு' இப்ப இல்லைன்னு பேசிக்கிறாங்க. இதனால, அவரை 'மாத்தறதுக்கும்' ஏற்பாடு நடக்கறதா ஒரு பேச்சு உலா வருது...'' என்றாள் சித்ரா.''இதே கருத்தைத்தான் தோழர்களும் சொல்றாங்க. பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு. அக்கா, திருமுருகநாதசுவாமி ஊர் ெஹல்த் சென்டர்ல, சிலரு கொரோனா தடுப்பூசி போட போயிருக்காங்க. மருந்து 'ஸ்டாக்' இல்லைன்னு, திருப்பி அனுப்பிச்சிட்டாங்க. ஆனா, அதே டைம், கார்ல வந்தவர்களுக்கு, சத்தமில்லாம கூட்டிட்டு போய், ஊசி போட்டிருக்காங்க,''''அப்புறம் என்னாச்சு?''''இத கேள்விப்பட்ட, தாமரை கட்சி நிர்வாகிகள் கேட்டதுக்கு, 'பெரிய ஆபீசர் ரெக்கமண்ட்ல ஊசி போட்டுட்டு போனாங்க,'ன்னு பதில் சொன்னாங்களாம். இதுபோலத்தான், சில ஜி.ஹெச்., ெஹல்த் சென்டரில் வி.ஐ.பி., கோட்டாங்கற பேர்ல, கொஞ்சம் மருந்தை தனியா எடுத்து வைக்கிறாங்களாம்...''''என்னத்த சொல்றது மித்து. தடுப்பூசியிலும் சிபாரிசா...'' ஆதங்கப்பட்டாள் சித்ரா.''அக்கா... பல்லடத்தில, பால் வியாபாரி ஒருத்தர், கர்நாடகாவில் இருந்து 'சரக்கு' வாங்கி, பதுக்கி வைச்சு, விக்கறாரு. இது தெரிஞ்சு போலீஸ் போறதுக்கு முன்னாடி, பால்க்காரர் இடத்த மாத்திட்டாரு. போலீஸ்ல இருக்கற 'கூஜா' துாக்கற 'கறுப்பாடு' யாரோதான், ரெய்டு போற விஷயத்தை சொல்லிட்டாங்களாம்,'' மித்ரா சொன்னாள்.''கறுப்பாட்ட கண்டுபிடிச்சு களையெடுத்தா நல்லா தான் இருக்கும், யார் செய்வா?,'' சொன்ன சித்ரா, ''மித்து, கட்சிக்காரரை விட, காக்கி சட்டைக்காரங்க ஓவரா விசுவாசம் காட்றாங்களாம்,'' என, கடைசி தகவலை சொன்னாள்.''யாருங்க்கா... எங்கே...?'' கேள்வி கேட்டாள் மித்ரா.''லோக்கல் மினிஸ்டரை பார்க்கப்போன, லிங்கேஸ்வரர் குடிகொண்ட ஊரிலுள்ள 'மீசை' அதிகாரி ஆளுயர மாலையை போட்டு அசத்திட்டாராம். இதப்பத்தி கட்சிக்காரங்களை மெரண்டு போயிட்டாங்களாம். விஷயம் என்னன்னா, காங்கயத்துக்கு, 'டிரான்ஸ்பர்' கேட்டுதான், அவரை பார்த்தாராம்,''''ஏக்கா, போன விஷயம் 'பாஸ்' ஆயிடுச்சா...?''''ஆயிடும் தான் சொல்றாங்க. ஓ.கே., மித்து, நாளைக்கு கூப்படறேன்,'' என்று கூறி, இணைப்பை துண்டித்தாள், சித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE