பொது செய்தி

இந்தியா

மொத்தவிலை பணவீக்கம் இரட்டை இலக்க உயர்வு

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில், இரட்டை இலக்கத்தில் அதிகரித்து, 10.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை காணாத அதிகரிப்பாகும்.இதற்கு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் தயாரிப்பு பொருட்கள் விலை அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.மேலும், கடந்த ஆண்டு ஏப்ரலில் மிகக் குறைவாக இருந்ததும், ஒப்பீட்டளவில் மிகவும்

புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில், இரட்டை இலக்கத்தில் அதிகரித்து, 10.49 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, இதுவரை காணாத அதிகரிப்பாகும்.



latest tamil news



இதற்கு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் தயாரிப்பு பொருட்கள் விலை அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக அமைந்துள்ளது.மேலும், கடந்த ஆண்டு ஏப்ரலில் மிகக் குறைவாக இருந்ததும், ஒப்பீட்டளவில் மிகவும் அதிகரிக்க காரணமாக உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில், மைனஸ் 1.57 சதவீதமாக இருந்தது.கடந்த மார்ச் மாதத்தில், மொத்தவிலை பணவீக்கம், 7.39 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து நான்கு மாதங்களாக, மொத்தவிலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது.கடந்த ஏப்ரலில், கச்சா எண்ணெய், தயாரிப்பு பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ளன.


latest tamil news



உணவு பொருட்கள் பிரிவில், பணவீக்கம், 4.92 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, புரதச் சத்து மிகுந்த முட்டை, இறைச்சி, மீன் ஆகிய வற்றின் விலை அதிகரித்துள்ளது.. பழங்களின் பணவீக்கம், 27.43 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த ஏப்ரலில், சில்லரை விலை பணவீக்கம், 4.29 சதவீதமாக, ரிசர்வ் வங்கியின் சவுகரியமான வரம்பிற்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
18-மே-202116:40:30 IST Report Abuse
Ray சில்லறை விலை (150 %) ஒன்றரை மடங்கு உயர்ந்துள்ளதே உதாரணமாக சமையல் எண்ணையின் விலை ரூ 510 லிருந்து ரூ 735 ஆக உயர்ந்துள்ளது
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-மே-202113:20:22 IST Report Abuse
g.s,rajan இனி பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வரி உயர்வுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நாடு தழுவிய அளவில் நடத்தவேண்டும் அதை பார்த்து இந்த அரசாங்கம் மிரண்டு போகவேண்டும் ,அதுதான் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க உதவும் மக்கள் பேசா மடந்தைகளாக இருப்பின் அரசாங்கம் மக்களின் தலையில் நிச்சயம் மிளகாய் அரைத்து விடும் , ஜி.எஸ்,ராஜன் சென்னை .
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
18-மே-202111:50:54 IST Report Abuse
Ellamman சுதந்திர பாரதத்தின் சிறந்த நிதி அமைச்சர் மற்றும் பிரதமர் வாழ்க அவர்கள் புகழ்....வளர்க அவர்கள் கொற்றம்...இன்னும் மூன்றரை ஆண்டுகள்... என்ன என்ன நடக்குமோ கடவுள் தான் ஏதாவது செய்யவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X