இது உங்கள் இடம் : புரிந்து கொள்ளுங்கள் மக்களே!

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :எஸ்.ஆர்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் புதிய கட்டடம் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு, எதிர்க்கட்சித் தலைவர்கள் சோனியா, தேவ கவுடா, உத்தவ் தாக்கரே, சரத் பவார், ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கையெழுத்திட்டு, பிரதமர்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
எஸ்.ஆர்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பார்லிமென்ட் புதிய கட்டடம் கட்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு, எதிர்க்கட்சித் தலைவர்கள் சோனியா, தேவ கவுடா, உத்தவ் தாக்கரே, சரத் பவார், ஸ்டாலின், மம்தா பானர்ஜி, மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கையெழுத்திட்டு, பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு, நாடே தத்தளிக்கும் போது, இந்தகட்டுமானப் பணி அவசியம் தானா என, அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.



latest tamil news



மேலும், அதற்கு செலவிடப்படும் தொகையில், 1,000க்கும் மேற்பட்டமருத்துவமனை கட்டலாம்; 100க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்கலாம்; வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசிகளை தருவிக்கலாம் என கற்பனை சிறகை விரித்து, கதை அளக்கின்றனர்.மக்கள், சில உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும்...பார்லிமென்ட் புதிய கட்டடம், பிரதமர் வீடு கட்டும் திட்டங்கள், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் துவங்கப்பட்டதுஅல்ல... 2012ல் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் துவக்கப்பட்டது. அப்போது, 35 ஆயிரம் ச.மீட்டரில், 3,000 கோடி ரூபாய் பட்ஜெட்டில், லோக்சபா தலைவராக இருந்த மீராகுமாரின் ஒப்புதலுடன் உருவான திட்டம். இத்திட்டம், 2020ல், 3,900 கோடிரூபாயாக திருத்தப்பட்டிருக்கும். இந்த திட்ட மதிப்பானது, புரோக்கர்களுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் அளிக்க வேண்டிய அன்பளிப்புகளை உள்ளடக்கியது.


latest tamil news



விஷயம் என்னவென்றால், 3,000 கோடி ரூபாய் மதிப்பில், 35 ஆயிரம் ச.மீட்டரில் கட்ட திட்டமிடப்பட்டிருந்த கட்டடங்களைத் தான், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 65 ஆயிரம் ச.மீ.,யில் வெறும், 970 கோடி ரூபாய் செலவில் கட்ட ஆயத்தமாகி உள்ளது. பரப்பளவில், 30 ஆயிரம் ச.மீ., கூடுதல். ஆனால், திட்ட செலவில், 2,030 கோடி ரூபாய் குறைவு. காரணம், கமிஷன் கிடையாது! தங்களுக்கு கமிஷனாக மட்டும் கிடைக்க வேண்டிய, 2,000 கோடி ரூபாயை கிடைக்க விடாமல் செய்த பிரதமர் மோடி மீது, எதிர்க்கட்சியினருக்கு கோபம் வராமல் இருக்குமா? அதனால் தான், அத்திட்டத்தை தடுக்க வேண்டும் என, வானுக்கும் பூமிக்குமாய் எகிறி குதிக்கின்றனர். அதை புரிந்து கொள்ளுங்கள் பொதுமக்களே!

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayakandhan KS - coimbatore,இந்தியா
20-மே-202117:02:29 IST Report Abuse
Jayakandhan KS மக்களே என்பதைவிட களே என்பதே பொருந்தும் ...
Rate this:
Cancel
PRAKASH.P - chennai,இந்தியா
18-மே-202123:34:58 IST Report Abuse
PRAKASH.P மக்கள் செத்து கொண்டிருக்க மகேசன் ஊஞ்சலாட புது ஊஞ்சல்
Rate this:
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,யூ.எஸ்.ஏ
18-மே-202122:59:22 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இதே அகிலேஷ் யாதவ் தான், பிஜேபி கொண்டுவரும் தடுப்பூசியை யாரும் போட்டுக்கொள்ளாதீர்கள் என்று கூறியவர். மக்களை பற்றி அக்கறையில்லை, மாறாக அதிக மக்கள் இறந்தால் ஆட்சியை கைப்பற்றலாம் என்கிற ஒரே நல்லெண்ணம் தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X