சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்1. கல்லூரி மாணவர் கொலை ; ஆட்டோ டிரைவர் கைதுதிருவண்ணாமலை : கல்லுாரி மாணவரை குத்தி கொலை செய்த, ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த கருங்காலிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின்குமார், 19; திருவண்ணாமலை அரசு கலைக் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இவரது உறவினர் செந்தாமரைக் கண்ணன், 33;

தமிழக நிகழ்வுகள்
1. கல்லூரி மாணவர் கொலை ; ஆட்டோ டிரைவர் கைது
திருவண்ணாமலை : கல்லுாரி மாணவரை குத்தி கொலை செய்த, ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் அடுத்த கருங்காலிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அஸ்வின்குமார், 19; திருவண்ணாமலை அரசு கலைக் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.இவரது உறவினர் செந்தாமரைக் கண்ணன், 33; ஆட்டோ டிரைவர். கடந்த, 10 நாட்களுக்கு முன் அஸ்வினை, கீழ்பென்னாத்துாருக்கு சென்று வரலாம் என செந்தாமரைக் கண்ணன் அழைத்தார். அதற்கு அஸ்வின் மறுத்தார்.ஆத்திரத்தில், செந்தாமரைக் கண்ணன், தான் வைத்திருந்த கத்தியால் அஸ்வினை குத்தினார். படுகாயம் அடைந்த அஸ்வின், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று உயிரிழந்தார்.கீழ்பென்னாத்துார் போலீசார், செந்தாமரைக் கண்ணனை கைது செய்தனர்.latest tamil news2. விதிகளை மீறிய 2 திருமண மண்டபத்துக்கு 'சீல்'
புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே, கொரோனா விதிகளை மீறிய இரு திருமண மண்டபங்களுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.

தமிழகம் முழுதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. திருமணம் போன்ற விசேஷங்களில், 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டைமாவட்டம், ஆலங்குடியில் உள்ள இரண்டு தனியார் திருமண மண்டபங்களில், நேற்று திருமணங்கள் நடந்தன. இதில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் அதிக அளவிலான மக்கள் குவிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, ஆலங்குடி டவுன் பஞ்., செயல் அலுவலர் கணேசன், ஆர்.ஐ., குணசேகரன், சுகாதாரத்துறை ஆய்வாளர் ஜேம்ஸ் ஆகியோர் அரசமரம், சந்தைப்பேட்டையில் உள்ள இரண்டு திருமண மண்டபங்களில் ஆய்வு செய்து, அவற்றுக்கு 'சீல்' வைத்தனர்.


latest tamil news3. 'ரெம்டெசிவிர்' விற்பனை நிறுத்தம் கோவையில் மக்கள் சாலை மறியல்
கோவை:கோவை அரசு மருத்துவக் கல்லுாரியில், 'ரெம்டெசிவிர்' மருந்து விற்பனை நிறுத்தப்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவ கல்லுாரியில், கடந்த 9ம் தேதி முதல், ரெம்டெசிவிர் மருந்து பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. மருந்து வாங்குவதற்கு தினமும் ஏராளமான மக்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிய தொடங்கினர். இதனால், நோய் தொற்று பரவல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.இதையடுத்து, டோக்கன் முறையில் தினமும், 50 பேருக்கு மட்டுமே, மருந்து விற்பனை செய்யப்பட்டது. மீண்டும், 17ம் தேதி முதல் புதிதாக டோக்கன் வழங்கப்பட்டு, ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.


latest tamil news


Advertisement


ஆனால், இன்று முதல் தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.இதையடுத்து, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவ மனையில், நேற்று மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது. ஆவேசமடைந்த மக்கள், அதிகாரி களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, அவிநாசி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பீளமேடு போலீசார் சமரச பேச்சு நடத்தியதால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

4. ரூ.1.18 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பறிமுதல்
சென்னை : ஐக்கிய அரபு நாட்டின், ஷார்ஜா நகரில் இருந்து 'எமர்ஜென்சி' லைட்டில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 1.18 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு நாட்டின் ஷார்ஜா நகரில் இருந்து 'ஏர் அரேபியா' விமானம் நேற்று அதிகாலை 3:10 மணிக்கு சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த கேரள மாநிலம் மங்களூரைச் சேர்ந் முகமது அராபத், 24, என்பவரை, சந்தேகத்தில் சுங்கத்துறையினர் சோதனையிட்டனர்.அவர் கொண்டு வந்த 'எமர்ஜென்சி' லைட் வழக்கத்திற்கு மாறாக கனமாக இருந்தது. அதை பிரித்து பார்த்த போது, அதன் உள்ளே 2.39 கிலோ எடையில் தங்கக் கட்டிகள் இருந்தன. அதன் மதிப்பு 1.18 கோடி ரூபாய்.முகமது அராபத்தை கைது செய்து, சுங்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news5. பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கணவர் குடும்பத்தோடு கைது
சென்னை : சென்னை ஆவடியில் பெண்ணின் ஆபாச படத்தை 'பேஸ்புக்'கில் வெளியிடுவதாக மிரட்டிய கணவரை போலீசார் குடும்பத்தோடு கைது செய்தனர்.

கும்பகோணத்தை சேர்ந்தவர் கல்பனா 38. இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ளனர். கருத்து வேறுபாடால் மூன்று ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தஞ்சாவூரில் தனியார் வங்கியில் 'கிரேடிட் கார்டு' பிரிவில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார். அப்போது ஆவடி சேக்காடைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் 35 என்பவருடன் பேஸ்புக் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது.பிரசன்ன வெங்கடேஷ் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அவர்களது நட்பு காதலாக மாற ஜன. 16ம் தேதி திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஆவடி பருத்திப்பட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். பிரசன்ன வெங்கடேஷ் கல்பனாவை ஆபாசமாக படம் எடுத்துள்ளார்.இந்நிலையில் தம்பதி இடையே ஏற்பட்ட பிரச்னையின்போது அந்த படங்களை பேஸ்புக்கில் வெளியிடுவேன் என பிரசன்ன வெங்கடேஷ் மிரட்டியுள்ளார். தொடர்ந்து குடும்பத்தோடு சேர்ந்து 5 சவரன் நகை 3 லட்சம் ரூபாயை பறித்து ஜன. 30ம் தேதி வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.


latest tamil newsஇது குறித்த புகாரின் அடிப்படையில் ஆவடி போலீசார் பிரசன்ன வெங்கடேஷை நேற்று கைது செய்தனர்.மேலும் உடந்தையாக இருந்த அவரது தந்தை ரங்கசாமி 53 தாய் விஜயா 47 தங்கை புவனேஸ்வரி 32 ஆகியோரையும் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் அவர் ஏற்கனவே முதல் மனைவியை ஏமாற்றியதும் அதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

இந்தியாவில் குற்றம் :
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டம் கோன்மோ பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர், நேற்று அப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது, இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


latest tamil newsஉலக நடப்பு
இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் ஹமாஸ் படையினரின் சுரங்கம் தகர்ப்பு
காசா சிட்டி : காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று காலை நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பினரின், 15 கி.மீ., நீளமுள்ள சுரங்கம் தகர்க்கப்பட்டது. அந்த அமைப்பின் மூத்த கமாண்டர்கள் ஒன்பது பேர் வீடுகளும் தரைமட்டமாகின.


latest tamil newsமேற்காசிய நாடான இஸ்ரேலின் ஜெருசலம் நகருக்கு யூதர்கள், கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் யூதர்கள் பெரும்பான்மையினராக உள்ள இஸ்ரேலுக்கும், முஸ்லிம்கள் அதிகம் உள்ள பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு உள்ளது. இரு நாட்டின் எல்லையில் உள்ள காசா மலைக்குன்று உள்ளிட்ட பகுதிகள், ஹமாஸ் எனப்படும் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளன.ஜெருசலத்தில் உள்ள ஒரு வழிபாட்டு தலம் தொடர்பாக சமீபத்தில் பிரச்னை ஏற்பட்டது. அந்தப் பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் வெளியேற்றியது.

இதையடுத்து, இஸ்ரேல் மீது, காசாவில் இருந்து ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. காசா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்கு மாடி கட்டடங்கள், முக்கிய சாலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.காசாவில், நேற்று முன் தினம், ஒரே நாளில் மட்டும், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 42 பேர் கொல்லப்பட்டனர். மூன்று உயர்ந்த கட்டடங்கள் தரைமட்டமாகின.கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் வான்வழி தாக்குதலில், 55 குழந்தைகள், 33 பெண்கள் உட்பட, 188 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் தரப்பில், 5 வயது சிறுவன் உட்பட எட்டு பேர் பலியாகினர்.இந்நிலையில், இஸ்ரேல் ராணுவத்தினர் நேற்று காலை நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பினர் உருவாக்கிய, 15 கி.மீ., நீளமுள்ள சுரங்கம் அழிக்கப்பட்டது. மேலும், ஹமாஸ் படையை சேர்ந்த ஒன்பது மூத்த கமாண்டர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப் பட்டன.இது குறித்து காசா மேயர் யாயா சர்ராஜ் கூறியதாவது:இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் உள்ள சாலைகள் மற்றும் இதர கட்டமைப்புகள் கடும் சேதம் அடைந்துள்ளன. மோதல் இப்படியே தொடர்ந்தால், நிலைமை இன்னும் மோசமாகும். நகரில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கிரிக்கெட் கிளப்பில் இந்திய மாணவர்கள்!
இஸ்ரேல் மீது, ஹமாஸ் படையினர் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தெற்கு இஸ்ரேல் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பென்குரியான் பல்கலைக்கழக மாணவர்கள், தங்குவதற்கு இடமின்றி தவிக்கின்றனர். வீடுகளை இழந்த உள்ளூர் மக்களுக்கு, அப்பகுதியை சேர்ந்த, 'பீர்ஷபா கிரிக்கெட் கிளப்' என்ற அமைப்பு, தங்கள் இரண்டு மாடி அலுவலக கட்டடத்தை தற்காலிகமாக வழங்கி உள்ளது. இங்கு இந்தியாவை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட, உள்ளூர் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
18-மே-202108:25:07 IST Report Abuse
a natanasabapathy பாலஸ்தீனியர்கள் தங்களது பெருகிவரும் ஜன தொகையை குறைக்க முயலுகின்றனர் நேரடியாக எதுவும் செய்ய முடியாததால் இஸ்ரேலுடன் வலுச்சண்டைக்கு சென்று அவர்கள் மூலமாக ஜனத்தொகையை அவ்வப்போது குறைத்து வருகின்றனர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X