கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கான இழப்பீடு தொடர்பான வழக்கு ; டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கக் கோரும் வழக்கு தொடர்பாக பரிசீலிக்கும்படி, மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை நாடு முழுதும்

புதுடில்லி : கொரோனா வைரஸ் பரவலின்போது ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கக் கோரும் வழக்கு தொடர்பாக பரிசீலிக்கும்படி, மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news



டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. டில்லியில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.டில்லியைச் சேர்ந்த பூரவ் மித்தா என்ற வழக்கறிஞர், டில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் அவர் கூறியுள்ளதாவது: ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் டில்லியில் பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பல குடும்பங்கள் வருமானம் ஈட்டித் தரும் நபரை இழந்துள்ளன. மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை செய்ய வேண்டியது, மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு. பேரிடர் காலத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்க உரிய வழிமுறைகளை உருவாக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இதை விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்றம், இந்த வழக்கை கோரிக்கை மனுவாக ஏற்று உரிய நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய மற்றும் டில்லி அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள ஏழை எளிய குடும்பத்தார், தனிமைப்படுத்திக் கொள்வதற்கான மையங்களை உருவாக்குவது தொடர்பாகவும் மற்றொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதையும் பரிசீலிக்கும்படி, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
18-மே-202108:27:15 IST Report Abuse
g.s,rajan கொரோனாவினால் பொது மக்கள் உயிர் இழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக ,நிவாரணமாக இருபது முதல் இருபத்தி ஐந்து லட்சம் அளிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் .செய்வார்களா ??? ஜி.எஸ்,ராஜன் சென்னை ,
Rate this:
Cancel
Ganesan - Masurai,இந்தியா
18-மே-202107:20:12 IST Report Abuse
Ganesan இப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் இழப்பீடு கேட்பது வாடிக்கையாகிவிட்டது. தவிர்க்க முடியாத காரணங்களால் நேரும் மரணங்களுக்கு இழப்பீட்டிற்கு பதிலாக அக்குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியடிப்படையில் அரசு வேலை அளிக்கலாம். இது அக்குடும்ப நிரந்தர வருமானத்திற்கு வழிவகுக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X