பொது செய்தி

தமிழ்நாடு

உரிய ஆவணம் இல்லாவிட்டால் 'இ - பதிவு' அனுமதி கிடையாது!

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : 'மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர், உரியஆவணங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே, 'இ - பதிவு' முறையில் அனுமதி வழங்கப்படும்' என, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, அதிவேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த, 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.மாவட்டம் விட்டு மாவட்டம்

சென்னை : 'மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர், உரியஆவணங்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே, 'இ - பதிவு' முறையில் அனுமதி வழங்கப்படும்' என, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



கொரோனா தொற்றின் இரண்டாவது அலை, அதிவேகமாக பரவி வருகிறது. தொற்றை கட்டுப்படுத்த, 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாவட்டத்திற்கு உள்ளே செல்வதற்கும், 'இ - பதிவு' அவசியம். மருத்துவ அவசரம், முதியோர் பராமரிப்பு, இறப்பு, இறப்பை சேர்ந்த காரியங்கள் போன்றவற்றுக்கு மட்டும் செல்ல, அனுமதி வழங்கப்படுகிறது.இதற்கு,eregister.tnega.orgஎன்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்; அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதும் அவசியம்.


latest tamil news



இது குறித்து, தமிழக மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவம், இறப்பு, முதியோர் பராமரிப்பு போன்ற தேவைகளுக்கு மட்டுமே, 'இ - பதிவு' வாயிலாக விண்ணப்பிக்க முடியும்.அத்துடன், மாநிலம் விட்டு மாநிலம் வரும் தொழிலாளர்களுக்கும், மாவட்டங்களுக்குள் உள்ள நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை அழைத்துச் செல்லவும், 'இ - பதிவு' அவசியம்.மேற்கூறிய அனைத்திற்கும் உரிய ஆவணங்களை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். ஆவணங்கள் இணைக்கப்படாவிட்டால், அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


திருமணத்திற்கு செல்ல தடை


 மாவட்டம் விட்டு மாவட்டம், திருமணத்திற்குசெல்வோர், தற்போது விண்ணப்பிக்க முடியாது. மருத்துவம், இறப்பு மற்றும் முதியோர் பராமரிப்புக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். திருமணம் என்ற வகை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டது மருத்துவம், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்காக, இ - பதிவு செய்து செல்வோர், மீண்டும் வீடு திரும்ப அனுமதி பெற வேண்டும். அதற்கான வசதி, இ - பதிவு விண்ணப்பத்தில் வழங்கப்படவில்லை. இதற்கான வசதியை இணையதளத்தில் ஏற்படுத்த வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்ன செய்ய போகிறாய் போங்க பா....... நீங்களும் உங்க ஊரடங்கு விதிகளும்....... எதையும் யோசிச்சு செய்யணும்.....
Rate this:
Cancel
VSR -  ( Posted via: Dinamalar Android App )
18-மே-202119:11:05 IST Report Abuse
VSR சென்னை வாசிகள் DMK வுக்கு ஓட்டு போட்டு ஒரு இடம் கூ ட எதிர்கட்சிக்கு கொடுக்க வில்லை. நான் திமுக வுக்கு ஓட்டு போட்டேன் என்னையே தடுக்கறீயா என்று தைரியமாக கேட்க முடியுமா? நான் திமுக வுக்கு ஓட்டு போட்டேன் என்னோட Bike ஐ வண்டியில் ஏற்றுவாயா என்று கேட்க முடியுமா? இப்போது கோபம் வருமே அய்யோ திமுக வுக்கு ஓட்டு போட்டுட்டேனே என்று. நீ திமுக வுக்கு ஓட்டு போட்டிருந்தாலும் சரி அல்லது திமுக உறுப்பினர் என்று கார்டை காட்டினாலும் சரி, அபராதம் செலுத்தித்தான் உன் Bike ஐ மீட்க முடியும். POLICE நிலையை வாசல்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வெயிலில் உருகிக் கொண்டுள்ளன. வண்டியை திரும்பப் பெறும் போதுPetrol எவப்ரேட் ஆகி Tank காலியாகிவிடும். டயர்களில் காற்று போயிருக்கும். அனுபவிங்கள்.
Rate this:
Cancel
rajan - CHENNAI,இந்தியா
18-மே-202115:05:55 IST Report Abuse
rajan ஓகே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X