சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர தீவிபத்து

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சேலம் : மேட்டூர் அனல்மின்நிலையத்தில் தீடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.மேட்டூர் பழைய அனல்மின்நிலையத்தில் 1 அலகில் 210 மெகாவாட் வீதம் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2 நாட்களாக மின் தேவை குறைந்ததால் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இந்த 4 அலகுகளுக்கும் நிலக்கரி குவித்து வைத்துள்ள யார்டில் இருந்து கன்வேயர்

சேலம் : மேட்டூர் அனல்மின்நிலையத்தில் தீடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.



latest tamil news



மேட்டூர் பழைய அனல்மின்நிலையத்தில் 1 அலகில் 210 மெகாவாட் வீதம் 4 அலகுகளில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். கடந்த 2 நாட்களாக மின் தேவை குறைந்ததால் 630 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.


latest tamil news



இந்த 4 அலகுகளுக்கும் நிலக்கரி குவித்து வைத்துள்ள யார்டில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் நிலக்கரி எடுத்து செல்லப்படும். இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிலக்கரி எரியும் போது கன்வேயர் பெல்ட்டும் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்து மேட்டூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக வரும் நாட்களில் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
18-மே-202117:34:09 IST Report Abuse
vnatarajan எல்லா அனல் மின் நிலையங்களிலும் இப்படிப்பட்ட தீ விபத்து வராமல் இருக்க தேவையான வழி முறைகளை ஏற்படுத்தவேண்டும்
Rate this:
Cancel
அறவோன் - Chennai,இந்தியா
18-மே-202116:58:32 IST Report Abuse
அறவோன் இரு வாரங்களாக கும்பி எரிந்துகொண்டிருக்கும் குழாமின் கைவேலைதான் இது
Rate this:
Cancel
G.Kirubakaran - Doha,கத்தார்
18-மே-202113:30:54 IST Report Abuse
G.Kirubakaran கோடை காலத்தில் , நிலக்கரி தானாகவே தீப்பற்றி எரியும். அவ்வபோது தண்ணீர் விட்டு ,ஏற்ப்படுத்த வேண்டும். இது முற்றிலும் அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம்
Rate this:
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-மே-202117:42:29 IST Report Abuse
Dr. Suriyaநிலக்கரி தானெவே ஏரியுமா? யாருயா கண்டுபுடிச்ச அறிவாளி? அது தீப்பிடிக்க வெப்பநிலை எவ்வளவு இருக்கவேண்டும் என்று தெரியுமா? 155 டிகிரி செல்சியஸ் வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X