பொது செய்தி

தமிழ்நாடு

மே.,18 : இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (மே.,18), பெட்ரோல் லிட்டருக்கு 94.54 ரூபாய், டீசல் லிட்டருக்கு 88.34 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை,

சென்னை: சென்னையில் இன்று (மே.,18), பெட்ரோல் லிட்டருக்கு 94.54 ரூபாய், டீசல் லிட்டருக்கு 88.34 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 94.31 ரூபாய், டீசல் லிட்டர் 88.07 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் 23 காசுகள் அதிகரித்து லிட்டர் 94.54 ரூபாயாகவும், டீசல் 27 காசுகள் உயர்ந்து லிட்டர் 88.34 ரூபாயாகவும் விற்பனை செய்யப் படுகிறது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
18-மே-202114:10:24 IST Report Abuse
g.s,rajan இனி பொதுமக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வரி உயர்வுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நாடு தழுவிய அளவில் நடத்தவேண்டும் அதை பார்த்து இந்த அரசாங்கம் மிரண்டு போகவேண்டும் ,அதுதான் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க உதவும் மக்கள் பேசா மடந்தைகளாக இருப்பின் அரசாங்கம் மக்களின் தலையில் நிச்சயம் மிளகாய் அரைத்து விடும் , ஜி.எஸ்,ராஜன் சென்னை.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-மே-202114:08:47 IST Report Abuse
g.s,rajan எல்லா வாகனங்களும் சோலாருக்கு அதாவது சூரிய சக்திக்கு மாறனும் அப்போதான் இந்தியா மக்களுக்கு விடிவு காலம் இல்லேன்னா பெட்ரோல் டீசல் விலையை ஏத்தி ,வரியை ஏத்தி விலைவாசியை ஏத்தி மக்களை வாழவும் விடாம சாகவும் விடாம நித்தம் போட்டுக் கொன்னுடுவாங்க , ஜி.எஸ்.ராஜன் சென்னை . .
Rate this:
Cancel
18-மே-202110:38:47 IST Report Abuse
வாஸ்ஸுதேவன் வணக்கம். நாம ஏங்க சண்ட போட்டுக்கணும். பெட்ரொல் டீஸல் விலை கொறஞ்சா ஒங்களுக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே. அத பாஜக MLA செஞ்சு பேர் வாங்கினா உங்களுக்கு ஏதாவது அப்ஜக்ஷனா. பிரச்சனய அவங்க கிட்ட விடுவோம். சால்வ் பண்ணத்தானே வந்திருக்காங்க. மத்தியிலேயும் அவங்க மணுஷங்க தானே. அவங்களாலேயே முடியல்லனா வேற யாரால முடியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X