நாரதா ஊழல் வழக்கு: திரிணமுல் தலைவர்கள் 4 பேரின் ஜாமின் நிறுத்தி வைப்பு

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
கோல்கட்டா: நாரதா லஞ்ச வழக்கில் கைதான, திரிணமுல் கட்சியை சேர்ந்த நால்வருக்கும் வழங்கப்பட்ட ஜாமினை, கோல்கட்டா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.மேற்கு வங்கத்தில் கடந்த 2014ல், மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சியின் போது, 'நாரதா நியூஸ்' என்ற செய்தி இணையதளத்தை சேர்ந்த மாத்யூ சாமுவேல் என்பவர், ஆட்சி மற்றும் அதிகாரத்தில்
Narada bribery case, Narada, Narada sting case, Calcutta HC, stays, bail, TMC ministers, MLA

கோல்கட்டா: நாரதா லஞ்ச வழக்கில் கைதான, திரிணமுல் கட்சியை சேர்ந்த நால்வருக்கும் வழங்கப்பட்ட ஜாமினை, கோல்கட்டா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததையடுத்து, அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த 2014ல், மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சியின் போது, 'நாரதா நியூஸ்' என்ற செய்தி இணையதளத்தை சேர்ந்த மாத்யூ சாமுவேல் என்பவர், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் உள்ளவர்களின் ஊழலை அம்பலப்படுத்தினார். இந்த வழக்கு கடந்த 2017ல் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.


latest tamil newsஇந்நிலையில், தற்போதைய மம்தா அரசில் பதவி வகித்து வரும், திரிணமுல் காங்.,கை சேர்ந்த அமைச்சர்கள் பிர்ஹத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் எம்.எல்.ஏ., மதன் மித்ரா மற்றும் திரிணமுல் காங்.,ல் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்துள்ள, முன்னாள் அமைச்சர் சோவன் சாட்டர்ஜி ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ., அனுமதி கோரியது. இதற்கு கவர்னர் ஜக்தீப் தன்கர் சமீபத்தில் அனுமதி வழங்கினார். இதையடுத்து, நான்கு பேரையும், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இந்த ஊழல் வழக்கில் கைதாகி உள்ள நால்வரும், 2014ல் அமைச்சர்களாக பதவி வகித்தனர்.

கைது செய்யப்பட்ட அவர்களுக்கு நேற்று மாலை, பாங்சால் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து கோல்கட்டா நீதிமன்றத்தை சிபிஐ நாடியது. விசாரணையின் முடிவில், நால்வர் மீதான ஜாமீனை, கோல்கட்டா உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு, நள்ளிரவில், பிரஸிடென்ஸி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கின் அடுத்த விசாரணை புதன்கிழமை நடைபெறுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
19-மே-202104:34:39 IST Report Abuse
Nepolian S அடே நாரதா....அது சாரதா
Rate this:
Cancel
RAMESH - CHENNAI,இந்தியா
18-மே-202117:34:20 IST Report Abuse
RAMESH why this raid exactly after election? Taking revenge???
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
18-மே-202115:09:12 IST Report Abuse
r.sundaram ஜாமீனை நிறுத்தி வைத்த நீதிபதிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். மம்தா அதிகார மமதையில் ஏதாவது செய்து விடப்போகிறார். மம்தாவை போலவே தமிழ் நாட்டில் இருந்தவர் ஒரு நீதிபதிக்கு, தண்ணீரையும், மின்சாரத்தையும் நிறுத்தினார் என்று தகவல் பரவியது நினைவிருக்கலாம். ஏற்கனவே மம்தா சி பி ஐ அதிகாரிகளையே, தனது போலீசை வைத்து கைது செய்தவர் என்ற செய்தியும் வெளி வந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X