அரசியல் செய்தி

தமிழ்நாடு

"இதைத்தான் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. திமுக அரசு தான் கேட்க மாட்டேன் என்கிறதே..."

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (34)
Share
Advertisement
கொரோனா நிவாரண நிதி, 2,000 ரூபாயை, நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்குப் பதில், அவர்களை ரேஷன் கடைகள் முன், கூட வைப்பதற்கு பதில், அவரவர் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடலாமே!-தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்இதைத் தான், இரண்டு நாட்களாக, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக தி.மு.க., அரசு தான் கேட்க மாட்டேன் என்கிறதே...' என சொல்லத் தோன்றும் வகையில்,
 தமிழக காங்., செய்தித் தொடர்பாளர், பீட்டர் அல்போன்ஸ்,அ.ம.மு.க., பொதுச் செயலர், தினகரன், பா.ம.க.,  மணி, தமிழ் மாநில காங்கிரஸ் ,ர் வாசன், பாரதிய கிசான் யூனியன், பல்பீர் சிங்

கொரோனா நிவாரண நிதி, 2,000 ரூபாயை, நேரடியாக பயனாளிகளுக்கு வழங்குவதற்குப் பதில், அவர்களை ரேஷன் கடைகள் முன், கூட வைப்பதற்கு பதில், அவரவர் வங்கிக் கணக்குக்கு மாற்றி விடலாமே!-தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


இதைத் தான், இரண்டு நாட்களாக, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. தமிழக தி.மு.க., அரசு தான் கேட்க மாட்டேன் என்கிறதே...' என சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை



கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக, 'ரெம்டெசிவிர்' மருந்தை வாங்குவதற்காக குவியும் கூட்டத்தால், கொரோனா தொற்று ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, அனைத்து மருத்துவமனைகளிலும் ரெம்டசிவிர் மருந்தை விற்பனை செய்ய, தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.-அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்


'பாரசிட்டமால் - 650 மாத்திரை, கொரோனாவை குணப்படுத்தும் என நாளை, டாக்டர்கள் சொன்னால் கூட, அந்த மருந்துக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு நம்மவர்களில், 'நல்லவர்கள்' பதுக்கி விடுவர்...' என கூறத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை



கொரோனா நோயாளிகளுக்கு அவசிய தேவையாக உள்ள ஆக்சிஜன் உற்பத்தியை, அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மற்றும் பொதுத்துறை தொழிற்சாலைகளில் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட வேண்டும். ஆக்சிஜன் உற்பத்தியாகும் தொழிற்சாலைகள் அதிகரிக்கப்பட வேண்டும்.-பா.ம.க., தலைவர் மணி


'ஏற்கனவே தொழிற்சாலைகளில் பிற உற்பத்தியை நிறுத்தி, ஆக்சிஜன் உற்பத்தி மட்டுமே செய்ய, முந்தைய அரசு உத்தரவிட்டிருந்தது. அதை அமல்படுத்தினால் போதும்...' என, கூறத் துாண்டும் வகையில், பா.ம.க., தலைவர் மணி அறிக்கை



குடும்ப அட்டைதாரர்களுக்கு, 2,000 ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவது போல, முதியோர் இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்கும் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் சிகிச்சையும் வழங்க வேண்டும்.-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்


latest tamil news



'நியாயம் தான். முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ளவர்களை யாரும் அனேகமாக கவனிப்பதில்லை; அரசாவது கவனிக்க வேண்டும்...' என சொல்லத் தோன்றும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் அறிக்கை



கொரோனாவுக்கு பயந்து, டில்லி போராட்டக் களத்தை விட்டு ஊர்களுக்குத் திரும்ப வாய்ப்பே இல்லை. நாங்கள் திரும்பிச் சென்றால், யாரும் எங்களைக் கவனிக்கப் போவது இல்லை. சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை அரசு நிரந்தரமாக்கி விடும்.-பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் சிங்


'கம்யூ.,க்களின் மூளை சலவை எந்த அளவுக்கு, போராட்டக்காரர்களை பாதித்துள்ளது பார்த்தீர்களா...' என, வேதனையுடன் சொல்லத் தோன்றும் வகையில், பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் பேட்டி

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-மே-202106:07:13 IST Report Abuse
meenakshisundaram idhu m
Rate this:
Cancel
18-மே-202120:27:42 IST Report Abuse
K R Ramakrishnan Ramakrishnan 0 ழ்ழழ்ழ
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
18-மே-202117:46:32 IST Report Abuse
vnatarajan முதியோர் மற்றும் ஆதரவுஅற்ற இல்லங்களில் இருப்பவர்கள் பெரும்பாலும் தேர்தலில் வோட்டு போடுவதில்லை. அதனால்தான் அரசாங்கம் அவர்களுக்கு ரூபாய் இரண்டாயிரம் கொடுப்பதில்லை போல தொன்றுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X