அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி: முதல்வர் உத்தரவு

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
சென்னை: ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கு வகையில், நிரந்தரத் தீர்வாக
TamilnaduCM, Oxygen, Vaccine, Produce, Stalin, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், ஆக்சிஜன், தடுப்பூசி, உற்பத்தி, நடவடிக்கை, உத்தரவு

சென்னை: ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கு வகையில், நிரந்தரத் தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை தமிழகத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.


latest tamil news


தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும். மேலும், குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விருப்பக் கருத்துகளை மே 31ம் தேதிக்குள் கோரியுள்ளது. பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
22-மே-202111:13:06 IST Report Abuse
Subramanian Narayanaswamy இதில் ஜாதி எங்கிருந்து வந்தது? நீங்களாகவே ஏன் இதில் ஜாதியை புகுத்துகிறீர்கள்?
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
18-மே-202122:50:31 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு 6 கோடி தல்டுப்பூசிகளை வாங்கி ஒவ்வொரு ஏரியாவாக போட்டு முடித்தால் தடுப்பூசியும் ஆக்சிஜன் தொழிற்சாலை தேவையேல்லையே. துக்லக்தர்பாரில் இப்படித்தான் நடக்கும்..இதில் எத்துணை % தெளிவா பேசி முடிச்சாச்சா
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
18-மே-202122:42:37 IST Report Abuse
அன்பு ஸ்டாலினின் இது போன்ற பேச்சுக்கள் வருவதற்கு காரணமே மத்திய அரசு பாதிப்பின் அடிப்படையில் தடுப்பூசிகளை பங்கீடு செய்யாமல், அரசியல் செய்வதால் தமிழன் தன்னை தற்காத்துக்கொள்ள பார்க்கின்றான். இனி இந்தியாவை நம்பி பிரயோஜனம் இல்லை. நமது கையே நமக்கு உதவி என்பதன் அர்த்தம் தான் இது. பல நாடுகள் ஏற்கனவே இதை தொடங்கிவிட்டன. ஆனால் ஒரு நாட்டிற்குள்ளேயே இப்படி ஒரு மாநிலம் யோசிக்கிறது என்றால், இங்கு அரசியல் எப்படி சாதி அடிப்படையில் புரையோடி போயுள்ளது என்பதை பார்க்கலாம். இதே தடுப்பூசிகள் தான் நாளை உங்களை காப்பாற்றும். அப்போது உபியில் இருந்து உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது. சாதியை கொஞ்சம் நகர்த்திவைத்துவிட்டு, சமத்துவமாக யோசியுங்கள். உயிரே போனாலும் சாதியையும், சாதி சார்ந்த அரசியல் தான் முக்கியம் என்றால், தமிழகத்தில் தடுப்பூசி தயாரிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X