பொது செய்தி

இந்தியா

தினசரி கொரோனா பாதிப்பு 10 நாளில் 27 சதவீதம் குறைந்தது: மத்திய அரசு

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: தினசரி கொரோனா பாதிப்பில் உச்ச நிலையான 4.14 லட்சம் (மே 7-ல் பதிவானது) என்ற நிலையைவிட, 10 நாட்களில் 27 சதவீதம் அளவிற்கு பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
CovidCases, Decreased, LavAgarwal, கொரோனா, பாதிப்பு, குறைவு, லாவ் அகர்வால்

புதுடில்லி: தினசரி கொரோனா பாதிப்பில் உச்ச நிலையான 4.14 லட்சம் (மே 7-ல் பதிவானது) என்ற நிலையைவிட, 10 நாட்களில் 27 சதவீதம் அளவிற்கு பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்புகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த மே 3ம் தேதி கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் விகிதம் 81.7 சதவீதமாக இருந்த நிலையில், அது இப்போது 85.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ளனர். நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கான டிஸ்சார்ஜ் பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டோர் விகிதம் 14.10 சதவீதமாக உள்ளது.


latest tamil news


இந்தியாவில் 8 மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். 10 மாநிலங்களில் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெறுகின்றனர், 18 மாநிலங்களில் 50 ஆயிரத்துக்கும் குறைவானவர்களே சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் இதுவரை 1.8 சதவீதம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மே 7-ம் தேதி தான் அதிகளவாக 4 லட்சத்து 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 2 லட்சத்து 63 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளன. இது உச்சக்கட்ட பாதிப்பை விட 27 சதவீதம் குறைவாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-202123:01:49 IST Report Abuse
Pugazh V முந்தைய கருத்தைப் பதிவிட மாட்டீர்கள் . பதிவிட்டால் அதைப் படித்து பத்து பேர் யோசிக்க ஆரம்பித்து விட்டால் உங்கள் பொழப்பு ஓடாதல்லவா?? ஆனால் படிப்பீர்கள் அல்லவா? மூளை என்ஒன்று இருந்தால் யோசிப்பீர்கள் அல்லவா? அது போதும். நன்றி
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-மே-202122:59:51 IST Report Abuse
Pugazh V இப்படி எப்ப பாத்தாலும் தமிழக மக்களை தமிழக அரசை தமிழக அதிகாரிகளை தமிழக மருத்துவ மனை களை எல்லாம் திட்டிக்கொண்டே என்ன ஜென்மம் இது? இந்த மாநிலம் பிடிக்கவில்லை என்றால் குடும்ப த்தோடு குஜராத், உ.பி. என்று எங்கேயாவது போய்த் தொலைய வேண்டிய து தானே? தமிழத மண்ணில் வீடு தமிழன் விளைவித்த உணவுகளைத் தின்று தமிழன் கொண்டு வரும் பால், தண்ணீர் குடித்து தமிழக மக்களால் உயிர்பிச்சை போடப்பட்டதால் வாழும் இந்த ஆசாமி ??
Rate this:
Cancel
SUDHAKAR - Dublin,அயர்லாந்து
18-மே-202119:34:29 IST Report Abuse
SUDHAKAR எனக்கு தெரிந்து மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம் ஆனால் சில மேதாவிகள் (குரங்குகள்) உள்ளன. எனக்கு தெரிந்த நபர் காரோண பாதித்து குடும்பத்துடன் மருத்துவமனைக்கு செண்ரூ இலவசமாக மருத்துவம் செய்து வயிறு புடைக்க உண்டு சிம்ப்டன்ஸ் குறைந்ததால் ஆறு மற்றும் எட்டாவது நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிக்கு வந்தனர் வந்த மறுநாளே எந்த கட்டுப்படையும் கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் ஊர் சுற்ற தொடங்கினர் அதை எடுத்து சொன்னதிற்கு நங்கள் அவருடைய தனி மனித சுதந்திரதில் தலையிடுவதாகவும் அவரை சிறுமைப்படுத்துவதாகவும் சொல்லி எங்களை புறக்கணித்தனர். இவர்களால் எதனை பெயருக்கு நோய் தொற்றியதோ தெரியாது அனால் எங்கள் அப்பார்ட்மெண்ட் மட்டும் ஒன்பது நபர்களுக்கு பரவியது.எப்படியும் சில மிருகங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X