பொது செய்தி

இந்தியா

குறையும் கொரோனா பாதிப்பு: மீண்டும் 50,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மும்பை: கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதால் மும்பை பங்குசந்தைகளான சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்தும், நிப்டி 15 ஆயிரம் புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாகின்றது.கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கின. இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை
Sensex, 50k, சென்செக்ஸ்பங்குச்சந்தை, உயர்வு, கொரோனா

மும்பை: கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும், தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் குறைந்து வருவதால் மும்பை பங்குசந்தைகளான சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்தும், நிப்டி 15 ஆயிரம் புள்ளிகளை கடந்தும் வர்த்தகமாகின்றது.

கொரோனா தொற்று பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் அதிகரிக்க தொடங்கின. இரண்டாம் அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மே 6-ம் தேதி இதுவரை எந்த நாடும் சந்தித்திராத அளவு ஒரே நாளில் 4.1 லட்சம் பேரிடம் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதிப்பை குறைக்க பல மாநிலங்களும் ஊரடங்கு நடவடிக்கை எடுத்தன. இதனால் பிப்ரவரியில் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமான சென்செக்ஸ் ஏப்ரலில் 8 சதவீதம் அளவு சரிவடைந்தது.


latest tamil news


மத்திய அரசு தேசிய அளவிலான ஊரடங்கு முடிவை எடுக்காத காரணத்தால் பங்குச்சந்தைகள் பெரிய பாதிப்பை மார்ச் மற்றும் ஏப்ரலில் சந்திக்கவில்லை. இந்நிலையில் இன்று (மே 18) மீண்டும் சென்செக்ஸ் 50 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. நிப்டி 15 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை குறைவதும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைவதும் சந்தைக்கு சாதகமான அம்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொற்று பாதிப்பு குறைவதால் ஜூனில் ஊரடங்கு இருக்காது என்ற செய்தியும் பங்குச்சந்தைகளுக்கு ஏற்றத்தை தந்துள்ளது. மேலும் இந்திய சந்தையில் புதிய தடுப்பூச்சிகளை அனுமதிக்க எடுத்துள்ள முடிவு, இளைஞர்களுக்கும் தடுப்பூசி திட்டம் ஆகியவற்றால் தடையற்ற பொருளாதார நடவடிக்கை முன்னோக்கி செல்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-மே-202113:01:11 IST Report Abuse
தமிழ் இந்த ரணகளத்திலேயும் ஒரு கிளுகிளுப்பு.
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
19-மே-202111:42:19 IST Report Abuse
Narasimhan வங்கிகள் பத்து முதல் பன்னிரெண்டுவரை மட்டுமே இயங்கும். ஆனால் பங்குச்சந்தை ஒன்பது மணி முதல் மூன்றரை வரை. மார்வாடி குஜராத்திகள் பணம் குவிப்பதற்கு தான்
Rate this:
Cancel
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
19-மே-202103:17:02 IST Report Abuse
Raj அவனவனுக்கு கஞ்சிக்கு வழியில்லை இந்த கொரோனா காலத்தில். இந்த லட்சணத்தில் இது வேற வேணுமா? கங்கையிலே பாருங்க நம்ம நிலைமையை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X