பொது செய்தி

இந்தியா

பிளாஸ்மா சிகிச்சை முறை பலனளிக்காததால் கைவிட்டது அரசு!

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புது டில்லி: கொரோனா தொற்றுக்கு ஆளாகி மோசமான நிலையிலிருப்பவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என கூறி, அதனை கொரோனா சிகிச்சை வழிமுறைகளிலிருந்து அரசு கைவிட்டுள்ளது.கொரோனாவுக்கான தேசிய பணிக்குழு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சை பற்றி விவாதித்துள்ளனர். குழு உறுப்பினர்கள் பலரும் கொரோனா

புது டில்லி: கொரோனா தொற்றுக்கு ஆளாகி மோசமான நிலையிலிருப்பவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என கூறி, அதனை கொரோனா சிகிச்சை வழிமுறைகளிலிருந்து அரசு கைவிட்டுள்ளது.



latest tamil news



கொரோனாவுக்கான தேசிய பணிக்குழு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பிளாஸ்மா சிகிச்சை பற்றி விவாதித்துள்ளனர். குழு உறுப்பினர்கள் பலரும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையை நீக்குவதற்கு ஆதரவாக இருந்துள்ளனர். பல சந்தர்பங்களில் அது பயனற்றதாகவே இருப்பதாகவும், தேவையின்றி பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் சில விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் இது தொடர்பாக அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் விஜய ராகவனுக்கும் கடிதம் எழுதியுள்ளனர். ஐ.சி.எம்.ஆர் தலைவர் பால்ராம் பார்கவா மற்றும் எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா ஆகியோரையும் குறிப்பிட்டுள்ளனர். அக்கடிதத்தில், பிளாஸ்மா சிகிச்சையின் வழிகாட்டுதல்கள் தற்போதுள்ள ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று குறிப்பிட்டுள்ளனர்.


latest tamil news




எந்த நன்மையும் இல்லை



தற்போதைய ஆராய்ச்சி சான்றுகள் கொரோனா சிகிச்சைக்கு ரத்த பிளாஸ்மாவை வழங்குவதால் எந்த நன்மையும் இல்லை என குறிப்பதை சுட்டிக்காட்டினர். அதனைத் தொடர்ந்து ஐ.சி.எம்.ஆர்., ஆனது கொரோனா சிகிச்சைக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் பிளாஸ்மா பயன்பாட்டை கைவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Henry baskar - penang,மலேஷியா
19-மே-202112:34:17 IST Report Abuse
Henry baskar மருத்துவர்கள் மட்டும் அல்ல உலகமே குழம்பி போய் உள்ளது சீனாவை தவிர ..... என்ன நடக்குதுண்ணே தெரியவில்லை . ஒண்ணுமே புரியலே உலகத்துல... எண்ணமே நடக்குது, மர்மமா இருக்குது ....
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
19-மே-202107:41:11 IST Report Abuse
MANIAN K கெஜரிவால் இதுதான் சிகிச்சை என்று கூவினார். தப்க்ளிக்கி ஆட்களை தாங்கி பிடிக்க.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
18-மே-202120:00:12 IST Report Abuse
Ramesh Sargam இந்த கொரானா வந்த பிறகு மருத்துவர்களே மிகவும் குழம்பிப்போய் இருக்கின்றனர், என்ன சிகிச்சை செய்வதென்று தெரியாமல். கொரானா வைரஸை உலகிட்கு 'இலவசமாகிய' வழங்கிய சீனாவோ எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியில் உள்ளனர், உலக மக்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய சீனா முற்றிலும் அழிக்க படவேண்டும்.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-மே-202101:15:11 IST Report Abuse
தமிழவேல் நாம மேன்மேலும், அவனுவோ பொருளை இறக்குமதி செய்துக்கிட்டுதான் இருக்கோம்......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X