பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 33,059 பேருக்கு கொரோனா: 364 பேர் உயிரிழப்பு

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,059 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 364 பேர் உயிரிழந்து உள்ளனர். 21,362 பேர் குணமடைந்து உள்ளனர்.இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,463 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,059 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 12 பேர், வெளி நாடு மற்றும் வெளி

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 33,059 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 364 பேர் உயிரிழந்து உள்ளனர். 21,362 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news



இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 60,463 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 33,059 பேருக்கு கொரோனா உறுதியானது. அதில், 12 பேர், வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள், 33,047 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,64,350 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,54,33,956 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா உறுதியானவர்களில் 18,718 பேர் ஆண்கள், 14,341 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 9,93,980 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 6,70,332 ஆகவும் அதிகரித்து உள்ளது. 21,362 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,03,052 ஆக உயர்ந்தது.

364 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர். அதில், 172 பேர் தனியார் மருத்துவமனையிலும், 192 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,369 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
19-மே-202112:30:09 IST Report Abuse
Sadagopan Varadhachari @ நரேஷ் அண்ட் நவீன் எதிர்க்கடசியாக இருந்தபோது மரணங்களை குறைத்து காட்டுகிறார்கள் சரியான தகவல்களை தர தவறினால் உயர்நீதி மன்றம் செல்வோம் என கொக்கரித்த ஸ்டாலின் இப்போது பொதுமக்களிடம் மரண பீதியை ஏற்படுத்தவேண்டாம் என மீடியாக்களை எதற்கு வலியுறுத்த வேண்டும்.. முன்பாவது சுகாதாரத்துறை அமைச்சரோ அல்லது சுகாதார துறை செயலாளரொ தினசரி மாலை 6 லிருந்து 7 மணிக்குள் கொரோனா புல்லட்டின் வெளியிடுவார்கள்.இப்போது அது நடக்கிறதா
Rate this:
Cancel
Vijayakumard VIJAY - COIMBATORE ,இந்தியா
19-மே-202100:45:19 IST Report Abuse
Vijayakumard VIJAY எந்த ஒரு பத்திரிக்கை தலையெழுங்கத்திலும் எழுதவில்லை, போர் நடந்தால் கூட இவ்வளவு உயிரழப்பு ஏற்படும் என்பது சந்தேகமே...உண்மை என்ன வென்று மக்களுக்கு தெரியவில்லை...தினமலர் தலையெழுங்கத்தில் எழுதுமா... போர்க்கால நடவடிக்கை தேவை
Rate this:
Cancel
Vijayakumard VIJAY - COIMBATORE ,இந்தியா
19-மே-202100:42:19 IST Report Abuse
Vijayakumard VIJAY எந்த பத்திரிக்கை தலையெங்கத்திலும் எழுதவில்லை, போர் நடந்தால் கூட இவ்வளவு உயிரழப்பு ஏற்படும் என்பது சந்தேகமே...உண்மை என்ன வென்று மக்களுக்கு தெரியவில்லை...போர் கால நடவடிக்கை தேவை...எழுதுமா தினமலர் தலையெங்கத்தில்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X