பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : மே 18, 2021
Share
Advertisement
மே 19, 1938மஹாராஷ்டிரா மாநிலம், மாத்தெரானில், கொங்கணி பேசும் பிராமண குடும்பத்தில், 1938 மே 19ல் பிறந்தவர், கிரிஷ் ரகுநாத் கர்னாட். அவரது பள்ளிப்படிப்பு, மராத்தியில் இருந்தது. இங்கிலாந்தில் உள்ள, ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.சென்னையில் உள்ள, 'ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி' பதிப்பகத்தில் ஏழு ஆண்டுகள்

இதே நாளில் அன்று


மே 19, 1938



மஹாராஷ்டிரா மாநிலம், மாத்தெரானில், கொங்கணி பேசும் பிராமண குடும்பத்தில், 1938 மே 19ல் பிறந்தவர், கிரிஷ் ரகுநாத் கர்னாட். அவரது பள்ளிப்படிப்பு, மராத்தியில் இருந்தது. இங்கிலாந்தில் உள்ள, ஆக்ஸ்போர்டு பல்கலையில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.சென்னையில் உள்ள, 'ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி' பதிப்பகத்தில் ஏழு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின், புனே திரைப்படக் கல்லுாரியில் இயக்குனராகவும், தேசிய சங்கீத நாடக
அகாடமியின் நிர்வாகத் தலைவராகவும் பணியாற்றினார்.கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில், பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கன்னட எழுத்தாளரான இவர், 'ஞானபீடம்' விருது பெற்றுள்ளார். 'பத்மஸ்ரீ, பத்ம பூஷன்' உள்ளிட்ட விருதுகள் பெற்றுள்ளார். கடந்த, 2019 ஜூன் 10ம் தேதி, தன் 81வது வயதில் காலமானார்.கிரிஷ் ரகுநாத் கர்னாட் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X