பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு

Added : மே 18, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை:ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை, தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அத்தியாவசியமாக தேவைப்படும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஒரு நிரந்தர தீர்வாக, நம் மாநிலத்திலேயே, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்க, முதல்வர்
 தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி  உற்பத்தி செய்ய முதல்வர் உத்தரவு

சென்னை:ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை, தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு, அத்தியாவசியமாக தேவைப்படும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, ஒரு நிரந்தர தீர்வாக, நம் மாநிலத்திலேயே, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள், கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை, நம் மாநிலத்திலேயே உருவாக்க, தொழில் கூட்டு முயற்சிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில், தொழில் துறையின் கீழ் இயங்கும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், மருத்துவ அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, ஆதரவையும், உதவிகளையும் அளித்து வருகிறது.குறைந்தபட்சம், 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், 'டிட்கோ' நிறுவனம், கூட்டாண்மை அடிப்படையில் இணைந்து செயலாற்ற உள்ளது.

இதன்படி, ஆலைகளை நிறுவ விருப்பம் உள்ள, இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து, விருப்ப கருத்துக்களை, மே, 31க்குள் சமர்பிக்க கோரியுள்ளது. அவ்வாறு பெறப்படும், விருப்ப கருத்துக்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி கூட்டமைப்புகளை, விரைவில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
19-மே-202123:12:17 IST Report Abuse
Enrum anbudan வாங்கப்பா அந்த தண்ணியை இதுல ஊத்துங்க, இந்த திரவத்தை அதோட சேர்த்து ஊத்துங்க .... அப்புறம் என்ன வாக்சின் தயார். உங்களோட புது அளப்பறைக்கு அளவில்லையா முதல்வரே. உங்கள் முகத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்புகிண்றீர்கள் தெரிகின்றது என்ன செய்வது குருவி தலையில பனங்காய் .....
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
19-மே-202119:50:26 IST Report Abuse
Sivagiri தினம் ஒரு தகவல் போல இப்போ - தினம் ஒரு அறிவிப்பு - - மக்களுக்கு மறந்து விடுவார்கள் என்ற தைரியம் - ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் முந்தய அறிவிப்புகள் எந்த அளவில் இருக்கின்றன என்று மீடியாவில் ஒரு டீடைல் ரிப்போர்ட் கொடுத்தால் தேவலை . . .
Rate this:
Cancel
saravan - bangaloru,சவுதி அரேபியா
19-மே-202118:11:16 IST Report Abuse
saravan ஐயோ ஐயோ ஐயோ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X