சென்னை:தமிழகத்தில், கொரோ னா 2வது அலை, தமிழ் திரைத்துறையில், மீண்டும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு அடுத்த மாதமும் தொடரும் நிலையிலேயே, கொரோனா பாதிப்பு உள்ளதால், நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள், மீண்டும் துவங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். முதல்வர் நிவாரண நிதிக்கு, கோடிகள் குவிந்து வருகின்றன. இதில், திரைத்துறையினரும் பங்கெடுத்துள்ளனர். திரைத்துறை தொழிலாளர்களுக்கு, அஜித், 10 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதேபோல், மற்றவர்களும் தங்களால் இயன்ற தொகையை, திரைத்துறைக்காக வழங்க வேண்டும். வசதிப் படைத்த தயாரிப்பாளர்கள், நலிந்தவர்களுக்கு உதவ வேண்டும்' என, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திரைத்துறை தொழிலாளர்கள் கூறியதாவது:கொரோனா போன்ற பேரிடர் பாதிப்பு, எப்போதோ ஒரு முறை தான் என, நினைத்து விட்டோம்; இது தொடர்கிறது. அனைவருமே பாதித்துள்ளனர். இதில், தினக்கூலிகள் அடுத்த வேளை உணவும் இன்றி, தவிக்கும் நிலையில் உள்ளனர். இனி, நீண்ட கால திட்டங்களையும், அதனால் அனைவரும் பயன்படும் வகையிலும், பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் கையேந்துவதை விட, அரசு சார்ந்த திட்டங்களை பயன்படுத்த வேண்டும்.
நடிகர்கள் ஆண்டுக்கு, 10 நாள் கால்ஷீட்டை இலவசமாக ஒதுக்கினால், அதன் வாயிலாக படம் தயாரித்து, நிதி திரட்ட முயற்சி மேற்கொள்ளப்படும்' என, பெப்சி தலைவர் செல்வமணி கூறியுள்ளார். இவ்வாறு தயாரிக்கும் படங்களை, ஓ.டி.டி., தளத்திலும் வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement