மாற்றுத் திறனாளிகள் துறையில் முறைகேடு? விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட கோரிக்கை!| Dinamalar

மாற்றுத் திறனாளிகள் துறையில் முறைகேடு? விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட கோரிக்கை!

Added : மே 18, 2021 | |
சென்னை:மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் முதன்மை கல்வி அலுவலர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிட, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக, மாற்றுத் திறனாளிகள் துறையின் கீழ், 22 அரசு சிறப்பு பள்ளிகள்; 50 அரசு உதவி பெறும் பள்ளிகள்; தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

சென்னை:மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் முதன்மை கல்வி அலுவலர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, விசாரணைக்கு உத்தரவிட, முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்காக, மாற்றுத் திறனாளிகள் துறையின் கீழ், 22 அரசு சிறப்பு பள்ளிகள்; 50 அரசு உதவி பெறும் பள்ளிகள்; தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடத்தும், 257 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் செயல்படுகின்றன.இவற்றை நிர்வகிக்க, முதன்மை கல்வி அலுவலர் அந்தஸ்தில், துணை இயக்குனர் பதவி, 2011ல் உருவாக்கப்பட்டது.

முதுநிலை பட்டம், பி.எட்., முடித்து, ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து அனுபவம் பெற்றவர், இந்த பொறுப்பில் நியமிக்கப்படுவார்.ஆனால், 2013ல் ஏற்பட்ட காலி யிடத்தை நிரப்ப, உரிய கல்வி தகுதியும், கற்பித்தல் அனுபவமும் இல்லாத பேச்சு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த கொரோனா தொற்று காலத்தில், சிறப்பு பள்ளி மாணவர்களை வழிநடத்துவதற்கான எந்த நடவடிக்கையையும், முதன்மை கல்வி அலுவலர் மேற்கொள்ளவில்லை என்றும், கூறப்படுகிறது.

இதுகுறித்து, வேலுார் மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் ஆவின் பாஸ்கர் கூறியதாவது: சிறப்பு பள்ளிகளுக்கான, முதன்மை கல்வி அலுவலர் பணியிடத்தில், அடிப்படை கல்வித்தகுதி மற்றும் விதிகளை பின்பற்றாமல் நியமனம் நடந்துள்ளது. இதுகுறித்த தகவலை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் செயலர் அலுவலகம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் அளித்துள்ளது.

முதன்மை கல்வி அலுவலராக உள்ள, பேச்சு பயிற்சியாளரின் கல்வி தகுதியும், அனுபவமும் தங்களுக்கு தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதவி உயர்வு வழங்கிய விபரமும் தெரியாது என்றும் கூறியுள்ளது. எனவே, மாற்றுத் திறனாளிகள் துறையில் நடந்த இந்த முறைகேடு குறித்து, முதல்வர் ஸ்டாலின் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் நலன் மற்றும் கல்வி மேம்படும் வகையில், சிறப்பு பள்ளிகளுக்கான நிர்வாகத்தை நடத்த, தகுதியானவரை முதன்மை கல்வி அலுவலராக பணியமர்த்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X