பொது செய்தி

தமிழ்நாடு

புதிதாக ரேஷன்கார்டு பெற்றவர்களுக்கு ரூ.2,000 வழங்க ஸ்டாலின் உத்தரவு

Added : மே 18, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:புதிதாக வழங்கப்பட்ட, 2.14 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், கொரோனா பாதிப்பு கால நிவாரணத்தின் முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்று பரவலால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையில், அரிசி ரேஷன்கார்டுதாரர்கள்

சென்னை:புதிதாக வழங்கப்பட்ட, 2.14 லட்சம் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், கொரோனா பாதிப்பு கால நிவாரணத்தின் முதல் தவணையாக, 2,000 ரூபாய் வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், கொரோனா தொற்று பரவலால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவும் வகையில், அரிசி ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் 4,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இம்மாதம் முதல் தவணை யாக, 2.07 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் நிவாரண தொகையை, 4,153.39 கோடி ரூபாய் செலவில் வழங்க உத்தரவிட்டார்.அரசு உத்தரவில், புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு, நிவாரண தொகை வழங்குவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் தங்களுக்கும்,நிவாரண தொகை வழங்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து, தற்போது நடைமுறைக்கு வந்துள்ள, இரண்டு லட்சத்து, 14 ஆயிரத்து, 950 புதிய அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், இம்மாதத்தில் முதல் தவணையாக, 2,000 ரூபாய், கொரோனா நிவாரண தொகை வழங்க, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.இதற்கு, 42.99 கோடி ரூபாய் செலவாகும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Subramanian - Chennai,இந்தியா
19-மே-202112:16:35 IST Report Abuse
S.Subramanian அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே அரசாங்கம் எல்லா நலத்திட்ட உதவிகளையும், இலவசங்ககளையும் கொடுக்கின்றன.. சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் பெரும் பணக்காரர்களா? அவர்கள் கொரானாவினால் பாதிக்கப்படவில்லையா? கொஞ்சம் மனிதாபிமானத்தோடு, அரசு எல்லோருக்கும் நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும். செய்வீர்களா....... முதல்வர் திரு. ஸ்டாலின் அவர்களே.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X