பொது செய்தி

தமிழ்நாடு

கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை: தலைமை செயலாளர் எச்சரிக்கை

Updated : மே 18, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தலைமை செயலர் இறையன்பு எச்சரித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தலைமை செயலர் இறையன்பு எச்சரித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் .தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறைரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.


latest tamil news



மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்றுசேர்ந்து தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில், ஒரு சில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சார்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதல்வரின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரசுக்கு அவப்பெயர் ஏற்படாமல், கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-மே-202123:18:18 IST Report Abuse
சிவம் அரசு அளிக்கும் 2000 ரூபாய் கொரோன நிவாரண நிதியில் 500 ரூபாய் பிடித்து கொண்டு 1500 மட்டுமே திண்டுக்கல் மாவட்டத்தில் கொடுக்கப்படுவதாக ஒரு வீடியோ வலம் வருகிறதே. செயலர் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
18-மே-202122:41:57 IST Report Abuse
G  Mahalingam சென்னையில் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணத்தை தொலை பேசி மூலம் கேளுங்கள்.‌ 5000 முதல் 6500 வரை. உண்மை தெரியும்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
18-மே-202122:37:42 IST Report Abuse
RajanRajan திராவிட அரசியல்வாதிகளுக்கு மட்டும் எல்லா விதிமிறலுக்கும் விலக்கா?? யார் இங்கே அவிங்களை கட்டுபடுத்துவர் கட்சியா அரசு நிர்வாகமா சாமிகளா?? அதனாலே உங்களாலே முடியுற சங்கதிகளை பற்றி சிந்தியுங்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X