கோவிட் நிதிகளும், விதிகளும்

Updated : மே 20, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (3) | |
Advertisement
கடல் நடுவே தத்தளிப்பவர்கள் கரையேறுவதற்கு ஒரு துடுப்பு கிடைக்காதா என்று ஏங்குவதுபோல இருக்கிறதுகொரோனாவில் பாதித்தவர்களது இன்றைய நிலவரம்.எத்தனை படுக்கைகள் போட்டாலும்மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக அலைமோதுகின்றனர்.சாதாரண விட்டமின் 'சி' மாத்திரைகள் தொடங்கிஉயிர்காக்கும் மருந்துகள் வரைக்கும்
கோவிட் நிதிகளும், விதிகளும்

கடல் நடுவே தத்தளிப்பவர்கள் கரையேறுவதற்கு ஒரு துடுப்பு கிடைக்காதா என்று ஏங்குவதுபோல இருக்கிறதுகொரோனாவில் பாதித்தவர்களது இன்றைய நிலவரம்.எத்தனை படுக்கைகள் போட்டாலும்மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக அலைமோதுகின்றனர்.சாதாரண விட்டமின் 'சி' மாத்திரைகள் தொடங்கிஉயிர்காக்கும் மருந்துகள் வரைக்கும் தட்டுப்பாடு.

கொடிய தொற்றுக்கு உறவுகளின் உயிரை பறிகொடுத்து இறுதிச்சடங்கிற்குக்கூட மயானத்திற்காகக் காத்திருக்கும் நிலை. தன்னெழுச்சியாக பல இளைஞர் குழுக்கள் நாடுமுழுதும் ஜாதி மத இனம் மறந்து ஓடோடி உதவி வருகின்றனர்.இமயத்தில் தொடங்கி இந்தியாவின் இதயப்பகுதிகளில் பரவி தன்னை பூமிக்கே அர்ப்பணிக்கும் புனித கங்கைபோலவே இப்படி சேவை அர்ப்பணிப்பு கொண்ட டிரஸ்ட் அமைப்புகள் பலவும் தேசத்தின் துயரங்களை துடைத்து வருகின்றன.


வரி விலக்குஇந்தியாவில் இயங்கிவரும் டிரஸ்ட்கள் உள்நாட்டில் சேவைப் பணிகளில் ஈடுபடுவதற்கு உள்நாட்டில் இருந்து நிதி திரட்ட தடைஏதுமில்லை. இத்தகைய டிரஸ்ட்கள் '12 ஏ' மற்றும்'80 ஜி' ஆகிய இரண்டுபிரிவுகளின் கீழ்வருமான வரித்துறையிடம் அங்கீகாரம் பெறும் வாய்ப்பும் உண்டு.அப்படி சம்பந்தப்பட்ட சேவை அமைப்புகள் '12 ஏ' பிரிவில் அங்கீகாரம் பெற்றிருந்தால் அந்த அமைப்புகள் வருமான வரி செலுத்த தேவை இல்லை.அதே அமைப்பு '80 ஜி' அனுமதி பெற்றிருந்தால் நன்கொடை அளிப்பவர்களுக்கும் வருமான வரி விலக்கு கிடைக்கும்.இந்தியாவில் இயங்கி வரும் டிரஸ்ட் அமைப்புகள் தங்களின் சேவை செயல்பாடுகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்ட வேண்டி இருந்தால் அதற்கு எப்.சி.ஆர்.ஏ.-Foreign Contribution Regulation Act-அனுமதி பெற்றிருக்க வேண்டும். இந்த அனுமதி வழங்கும் அதிகாரம்மத்திய நிதி அமைச்சகத்திற்கும் உள்துறை அமைச்சகத்திற்கும் சேர்ந்து உள்ளது.


வெளிநாட்டிலிருந்து பெறும் பணபரிவர்த்தனைகள் தீவிரவாதத்திற்கும் மதவாதத்திற்கும் உட்படுத்தப் படுவதைத் தடுப்பதற்காகஉள்துறை அமைச்சகமும் இதைத் தீவிரமாகக் கண்காணிக்கிறது. கடந்த ஆண்டில் எப்.சி.ஆர்.ஏ. வில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டன.தேசத்தின் பாதுகாப்பையும்ஒற்றுமையையும் நிலை நிறுத்தும் வகையில் இருப்பதால்இது தேவையான ஒன்று.

ஒரு நிறுவனம் வழங்கும் கோவிட் உதவிகள் சி.எஸ்.ஆர். எனப்படும்'கார்ப்பரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிலிட்டி'யின் கீழ் வருகிறது என்ற மத்திய அரசின் சமீபத்திய அறிவிப்பு வரவேற்கத்தக்கது.அதேபோல நாடு முழுதும் அந்தந்த மாநிலங்கள் மாவட்டங்களில் இயங்கிவரும் ரோட்டரி போன்ற பல தன்னார்வ டிரஸ்ட் அமைப்புகள் கோவிட் நிவாரணத்திற்கு பெருமளவில் உதவி வருகின்றன.


வெளிநாடுகளில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்த உறவினர், நண்பர்கள், நிறுவனங்கள் வாயிலாக நிதி திரட்டுவதற்கு முயன்று வருகின்றனர். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறுநாடுகளைச்சேர்ந்தவர்கள் தங்கள் தாய் மண்ணுக்கு உள்ளூர் மக்களுக்குதாங்களாகவும் தங்களது நண்பர்கள் மூலமும் உதவ தயாராக இருக்கின்றனர்.எப்.சி.ஆர்.ஏ. பதிவு இல்லாததால்இந்தியாவில் இயங்கும் டிரஸ்ட்கள் / ரோட்டரி போன்ற தன்னார்வ சேவை அமைப்புகள் டிரஸ்ட்கள் வெளிநாட்டு நிதி பெறுவதற்கு தடையாக உள்ளது.தங்கள் ஊருக்கும்உற்றத்திற்கும் உதவ நினைக்கும்வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளிகளுக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலையில் மருத்துவ தேவைகளும் மிக அதிகமாகி விட்டநிலையில் கோவிட் உதவிகளை நேரடியாக தாங்கள் வசித்த ஊருக்கோ அல்லது தங்கள் உறவுகளுக்கோ செய்யவெளிநாட்டு நன்கொடையாளர்கள் விருப்பப்படுகின்றனர்.இந்த நிதியைப் பெறஉள்நாட்டு டிரஸ்ட்களுக்கும் உதவும் வகையில் எப்.சி.ஆர்.ஏ. பதிவு என்ற நடைமுறையில்குறுகிய காலத்திற்கு தளர்வு அளிக்க வேண்டும்.கொரோனா பரவல் குறைந்துசகஜ நிலை திரும்பும் வரைக்குமான குறுகிய காலத்திற்காகவாவதுஏற்கனவே வருமான வரித்துறையிடம்'12 ஏ 80ஜி'பதிவு செய்யப்பட்ட டிரஸ்ட்களுக்குஎப்.சி.ஆர்.ஏ. தற்காலிக அனுமதி வழங்கமத்திய அரசு பரிசீலனை செய்யலாம்.


நாட்டின் மீதும் நாட்டு மக்களின் நலனிலும் தொடர்ந்து தன்முழு அக்கறையை வைத்திருப்பது மோடி அரசு. தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில்உதவ நினைக்கும் வெளிநாட்டு கர்ணன்களை சோர்ந்துபோக விட மாட்டார்கள் எனநம்பலாம்.ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் (karthi@gkmtax.com)

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGARAJ - CHENNAI,இந்தியா
19-மே-202116:02:27 IST Report Abuse
THANGARAJ ஆம். வெளிநாட்டு இந்தியர்கள், அந்த அந்த மாநில முதல்வர்கள் கொரோன நிவாரண நிதிக்கு நேரிடையாக பணம் அனுப்பலாம். அதில் ஆன்லைன் மூலமாக, கிரெடிட் கார்டு இன்னும் பிற எலக்ட்ரானிக் வசதிகளுடன் பணம் செலுத்தலாம்.
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
19-மே-202112:33:55 IST Report Abuse
Sivagiri ஆடு நொண்டினால் ஓநாய்க்கு சந்தோஷமாக இருக்கும் - - பிஎம் கேர் / அல்லது சிஎம் கேர் / உள்ளன - அல்லது பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலமாக செய்ய வேண்டியதுதான் பொருள்களாக அனுப்ப என்ன தடை.. நல்ல உள்ளங்கள் சிலதான் உள்ளன - அந்த முகமூடியை வைத்துக்கொண்டு கேடு விளைவிக்கும் உள்ளங்கள் எக்கச்சக்கமாக உள்ளன . . . ஒரு ஓநாய் வந்தால் மொத்த ஆட்டு மந்தையம் ஓடி விடும் . . .
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
19-மே-202111:14:52 IST Report Abuse
R. Vidya Sagar மார்ச் மாதம் 12A மற்றும் 80G விலக்குகளுக்கு விண்ணப்பித்தும் இன்னும் முடிவு தெரிய வில்லையே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X