பொது செய்தி

தமிழ்நாடு

தவறு செய்யும் அலுவலர்கள் பணி நீக்கம்

Updated : மே 20, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: 'மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.'தவறு செய்யும் அலுவலர்கள் மீது, பணி நீக்கம் உட்பட, துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் ஒன்று சேர தாக்குதல் நடத்தும்
தலைமை செயலர், இறையன்பு, எச்சரிக்கை, தவறு ,அலுவலர்கள், பணி நீக்கம்

சென்னை: 'மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.'தவறு செய்யும் அலுவலர்கள் மீது, பணி நீக்கம் உட்பட, துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என, தலைமை செயலர் இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் ஒன்று சேர தாக்குதல் நடத்தும் நேரத்தில், ஒரு சில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள், வணிக நிறுவனத்தை சேர்ந்த சிலர் மேற்கொள்ளும், சட்டத்திற்கு புறம்பான, மனிதாபிமானமற்ற செயல்கள், முதல்வரின் கவனத்திற்கு வந்துள்ளன.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது; மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பது; அரசின் இலவச சேவைகளுக்கும், பாதிக்கப்பட்டோரிடம் லஞ்சம் பெறுவது போன்ற, மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

தவறு செய்யும் அலுவலர்கள் மீது, பணி நீக்கம் உட்பட துறை ரீதியான நடவடிக்கைகள் பாயும்.இதுபோன்ற செயல்கள் குறித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட அரசு துறைச் செயலர்கள், துறைத் தலைவர்கள், காவல் துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆகியோருக்கு, அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

எந்த நிலையில் உள்ள அலுவலராக இருந்தாலும்; எந்த நிறுவனமாக இருந்தாலும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக் கூடிய இடங்களில், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த, அறிவுரை வழங்கப்படுகிறது.மக்களின் உயிர் காக்கும் பணியில், முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால், அவப்பெயர் ஏற்படாமல், கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டும்இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
22-மே-202119:31:24 IST Report Abuse
bal ஊழல் பண்ணிய குடும்பம்...????
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
22-மே-202116:28:29 IST Report Abuse
sridhar திமுக சார்பு அலுவலர்கள் தான் அதிகம் . என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்கடந்த பத்தாண்டுகள் ஆண்டவர்கள் ஆளே எடுக்க வில்லையா? அலெடுக்க முனைந்தபோதெல்லாம் பல ஊழல்கள் வெளிவந்து நீதிமன்றங்கள் தடுத்து நிறுத்தியதே நேற்று ஒரு பருப்பு டெண்டர் பணால்...
Rate this:
Cancel
yezhai thamizhan - Rio,பிரேசில்
22-மே-202107:37:35 IST Report Abuse
yezhai thamizhan அப்படியே கடலூர், சிதம்பரம், விருதாச்சலம் RTO வ கொஞ்சம் கவனிச்சா நல்லா இருக்கும். ரொம்ப லஞ்சம் கேட்கிறாராம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X