மனுக்களுக்கு தீர்வு காணும் பணி துவக்கம்

Updated : மே 20, 2021 | Added : மே 18, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை:'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறை சார்பில், குறை தீர்ப்பு பணிகள் துவங்கின. முதல் கட்டமாக, 549 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று, தலைமை செயலகத்தில், 10 மனுதாரர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி வழியே, மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது, 100
உங்கள் தொகுதி, முதல்வர் ,மனுக்கள், தீர்வு, துவக்கம்

 :மனுக்களுக்கு தீர்வு காணும் பணி துவக்கம்

சென்னை:'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறை சார்பில், குறை தீர்ப்பு பணிகள் துவங்கின. முதல் கட்டமாக, 549 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று, தலைமை செயலகத்தில், 10 மனுதாரர்களுக்கு, நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற நிகழ்ச்சி வழியே, மனுக்கள் பெறப்பட்டன.


அவற்றின் மீது, 100 நாட்களுக்குள் தீர்வு காண்பதற்காக, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற புதிய துறையை, முதல்வர் ஸ்டாலின் உருவாக்கினார். பின், அதற்கு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட்டார். அவரிடம் இம்மாதம், 9ம் தேதி அனைத்து மனுக்களும் ஒப்படைக்கப்பட்டன.

அனைத்து மாவட்டங்களில் இருந்தும், 72 மரப்பெட்டிகள் மற்றும், 275 அட்டை பெட்டிகளில், நான்கு லட்சம் மனுக்கள் இதுவரை பெறப்பட்டுள்ளன.ஒவ்வொரு மனுவும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதும், தனித்தன்மையுடன் கூடிய, அடையாள எண் வழங்கப்பட்டு, அந்த எண்ணுடன் கூடிய, எஸ்.எம்.எஸ்., மனுதாரருக்கு அனுப்பப்படுகிறது.
ஒவ்வொரு மனுவிலும் கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள், அதன் உண்மை தன்மைக்கேற்றவாறு, கள ஆய்வு செய்யப்பட்டு, உடனடி தீர்வு காண, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன.இதுவரை, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலுார், திருவாரூர், தேனி மாவட்டங்களில் இருந்து பெறப்பட்ட, 549 மனுக்கள் மீது, முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


நலத்திட்ட உதவிஇந்த திட்டம் செயல்படத் துவங்கியதை குறிக்கும் வகையில், 10 பயனாளிகளை, தலைமை செயலகம் வரவழைத்து, முதல்வர் ஸ்டாலின், நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

* சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த ராணிக்கு, முதியோர் உதவித்தொகை; தி.நகரை சேர்ந்த சத்தியநாராயணனுக்கு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை; சூளைமேடை சேர்ந்த தாயாரம்மாவுக்கு, முதிர் கன்னி உதவித்தொகை; தண்டையார்பேட்டையை சேர்ந்த சுமதிக்கு, தையல் இயந்திரம்; வில்லிவாக்கத்தை சேர்ந்த உதயகுமாருக்கு, வாரிசு சான்றிதழ் வழங்கப்பட்டது.

* ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த நந்தினிக்கு, காது கேட்கும் கருவி; ராணிப்பேட்டை மாவட்டம், கொண்டபாளையத்தை சேர்ந்த ஜெயந்திக்கு, இலவச வீட்டுமனை பட்டா; வெங்குபட்டு ஊராட்சியை சேர்ந்த சுபாசுக்கு, சொட்டு நீர் பாசன உதவி போன்ற நலத்திட்டங்களை, முதல்வர் வழங்கினார்.


பணி ஆணைகள்சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டிய, பொதுவான கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முதல் கட்டமாக, பொது கோரிக்கைகள் தொடர்பாக வரப்பெற்ற, நான்கு மனுக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான ஒப்புதல் ஆணையை முதல்வர் வழங்கினார்.

* திருவள்ளூர் மாவட்டம், முனுசாமி கோரிக்கை அடிப்படையில், அழிஞ்சிவாக்கம் ஊராட்சியில், 10.1 லட்சம் ரூபாய் செலவில், அங்கன்வாடி மையம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

* முருகன் என்பவர் கோரிக்கையை ஏற்று, ஆமூர் ஊராட்சி, சித்தேரி கால்வாயில், 4.6 லட்சம் ரூபாய் செலவில், தடுப்பணை கட்ட அனுமதி ஆணை அளிக்கப்பட்டது.

* ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த, குணசேகரனின் கோரிக்கை அடிப்படையில், அசநெல்லிகுப்பம் கிராமத்தில், 1.89 லட்சம் ரூபாயில், சிமெண்ட் சாலை.


* கல்மேல்குப்பம் ஊராட்சியை சேர்ந்த புவனேஸ்குமார் கோரிக்கை அடிப்படையில், எருக்கம்தொட்டி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவில், 1.1 லட்சம் ரூபாய் செலவில், குடிநீர் குழாய் அமைக்க ஆணை வழங்கப்பட்டுள்ளது.


இதுபோல, இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தையும், முறையாக ஆய்வு செய்து, விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என, துறை அலுவலர்களுக்கு, முதல்வர் அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், தலைமை செயலர் இறையன்பு, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas.... - Chennai,இந்தியா
19-மே-202114:26:46 IST Report Abuse
Srinivas.... புதிய அரசு ஒவ்வொன்றையும் கவனமாக செயல்படுத்துகிறது. நல்லதே நடக்கவேண்டுமென்று விரும்புகிறோம். குறைகள் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு வந்து தீர்க்கப்பட்டால் மனு அளித்தவர்கள் அனைவரும் நிம்மதியாக இருப்பர். இதுபோல் இன்னும் பல குறைகள் இருக்கக்கூடும்...அதையும் கண்டறிந்து தீர்க்கவேண்டும்.
Rate this:
Cancel
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
19-மே-202113:24:45 IST Report Abuse
வந்தியதேவன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின்... எனும் நிகழ்ச்சியில் இம்மனுக்கள் பெறப்பட்டபோது, இம்மனுக்கள் குப்பைக்கு போகும்.. .என்றும், இம்மனுக்களை தீர்க்க இவர் முதல்வராகவே ஆக முடியாது...ன்னு சொன்ன “......”கள் எங்கிருந்தாலும் வரவும்... வந்து தங்கள் எரிச்சலை கமெண்ட்டுகளாக போடவும்...
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
19-மே-202112:15:46 IST Report Abuse
sankar கூட்டத்துல யாரோ தன்னோட கணவரை காணோம்னு சொன்னதா அன்னைக்கு சொன்னாரே - கண்டுபுடிச்சுட்டாங்களா
Rate this:
தமிழ்நாட்டுபற்றாளன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
19-மே-202112:47:41 IST Report Abuse
தமிழ்நாட்டுபற்றாளன்ஏன் உன் மணியவிய காணோம் என்று நீ சொல்லியிருக்கியா என்ன , இப்படி தான் எடுபுடி ஸ்டாலின் 10 வருடம் ஆனாலும் அந்த BOX ஐ தோற்கப்போவதில்லை என்று சொல்லி , இப்போ வீட்டை கேட்டை திறக்காமல் வீற்றிக்குலே இருக்கிறார் பாவம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X