மகளை யுத்த பூமிக்கு அனுப்பும் உணர்வு!

Added : மே 18, 2021 | கருத்துகள் (7) | |
Advertisement
என் சொந்த ஊர் மதுரை. கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 15 ஆண்டுகள் வேலை பார்த்தேன். என்னுடன், என் மகளும் வயதான தாயும் இருந்தார்கள்.நம் மாநிலத்திற்கே வந்து விடலாம் என முடிவெடுத்தேன். ஏற்கனவே, 25 ஆண்டுகளுக்கு மேல் செவிலியர் பணி செய்த அனுபவம் இருந்ததால், தலைமை செவிலியர் பணி கிடைத்தது.பணியில் சேர்ந்து, வீடு பார்த்து விட்டு, மகளையும், அம்மாவையும் அழைத்து வரலாம் என
  மகளை யுத்த பூமிக்கு அனுப்பும் உணர்வு!

என் சொந்த ஊர் மதுரை. கொல்கட்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 15 ஆண்டுகள் வேலை பார்த்தேன். என்னுடன், என் மகளும் வயதான தாயும் இருந்தார்கள்.நம் மாநிலத்திற்கே வந்து விடலாம் என முடிவெடுத்தேன். ஏற்கனவே, 25 ஆண்டுகளுக்கு மேல் செவிலியர் பணி செய்த அனுபவம் இருந்ததால், தலைமை செவிலியர் பணி கிடைத்தது.பணியில் சேர்ந்து, வீடு பார்த்து விட்டு, மகளையும், அம்மாவையும் அழைத்து வரலாம் என திட்டமிட்டேன்.பணியில் சேர்ந்தவுடன், கொரோனா முதல் அலை அதிகமாகி, ஊரடங்கு அமலுக்கு வந்துவிட்டது.

எங்கும் செல்ல முடியவில்லை. என் அம்மாவும், மகளும் கொல்கட்டாவில் இருந்தார்கள். கொரோனா நோயாளிகளை கவனிப்பதால், எனக்கு யாரும் வீடு தர முன்வரவில்லை. கீழ்க்கட்டளையில் உள்ள 'கெஸ்ட் ஹவுசில்' தங்கி, பணிக்கு சென்று வந்தேன். புதிய வேலை; என் தலைமையில், 80 செவிலியர்கள்; விடுமுறை எடுக்க முடியாது.கொரோனா நோயாளிகளை கவனிப்பது, என் பொறுப்பில் இருக்கும் செவிலியர்களை நிர்வகிப்பது என்று இருந்தேன். முழு ஊரடங்கு தளர்த்திய பின், கிடைத்த ஓரிரு நாளில், அம்மாவையும், மகளையும் சென்னைக்கு அழைத்து வந்து விட்டேன். வயதான அம்மா, பள்ளி படிக்கும் மகள் இருவருக்கும் தேவையானதை செய்து விட்டு, காலையில் வந்தால் இரவு 11 மணிக்கு மேல் தான், கெஸ்ட் ஹவுஸ் போக முடியும்.

அவர்களோடு சேர்ந்து சாப்பிடுவது, துாங்குவது என்று எதுவும் செய்ய முடியாது. என்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம். மகளை இங்கு பள்ளியில் சேர்க்கவும் இயலாத சூழல்.தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் வந்த போது, உடல் நிலை சரியில்லாத வயதான அம்மாவின் துணையோடு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத, மகளை கொல்கட்டா அனுப்பி விட்டேன். தேர்வுகள் முடிந்ததும், என் மகளுக்கு தீவிர சிறுநீரக தொற்று ஏற்பட்டு, உடல்நிலை மோசமானது. அங்கு இருக்கும் என் நண்பர்கள்தான் மருத்துவ உதவிகளை செய்து, கவனித்துக் கொண்டார்கள். என்னால் போக முடியவில்லை. 'அம்மா, இங்கு வந்தால் உன் கவனிப்பு எனக்கு மட்டும் தான் கிடைக்கும். அங்கு நிறைய பேருக்கு உன் உதவி தேவைப்படும் நீ கவலைப்படாதே. நான் தைரியமாக இருக்கிறேன்' என்ற என் மகளின் வார்த்தைகள் தான், எனக்கு சக்தி தரும் மந்திரம்.இந்த இரண்டாவது அலையில் மக்கள் படும் துயரங்களை பார்த்தால், என் சொந்த சிரமம் ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

என் மகளுக்கு உடல்நிலை சரியில்லை; அம்மாவுக்கு வயதாகி விட்டது என்று சொல்லி, என் கடமையில் இருந்து தப்பிக்க விரும்பவில்லை.உயிருக்கு போராடும் ஒருவர், நமக்கு வேண்டுமானால் யாரோவாக இருக்கலாம்; அந்த குடும்பத்திற்கு அவர் முக்கியமானவர்.கொரோனா உறுதியானதும், அந்த நபரின் மனநிலை முற்றிலும் மாறி விடுகிறது. குடும்பம் அருகில் இல்லாத நிலையில், இருமல், காய்ச்சல் என்று அறிகுறிகளை பார்த்து, 'நான் இறந்து விடுவேனா' என்றுதான் பயம் கலந்த பதற்றத்தோடு கேட்கிறார்கள்.

அந்த நேரத்தில் செவிலியர் தான் மன தைரியம், நம்பிக்கை தர முடியும். மருந்து, சத்தான உணவு என்று அவர்களுக்கு கொடுத்து, தொற்றில் இருந்து வெளியில் கொண்டு வர முடியும். என் கீழ் பணிபுரியும் இளம் செவிலியர்களை, 'கோவிட் வார்டு'க்குள் அனுப்பும்போது, என் சொந்த மகளை யுத்த பூமிக்கு அனுப்பும் உணர்வுதான் வருகிறது. ஒவ்வொருவரும், தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே இப்போது செவிலியர்களைப் பார்க்கின்றனர். ராணுவ வீரர்களுக்கு இணையாக எங்களை மதிக்க துவங்கி உள்ளனர்.



Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
19-மே-202120:34:42 IST Report Abuse
RajanRajan கண்ணியமிக்க இந்த தியாக உள்ளத்திற்கு இறையருள் சார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள். வாழ்க மகளே.
Rate this:
Cancel
19-மே-202114:36:23 IST Report Abuse
சூரியா இவர் போன்று தன்னலமற்ற பொது சைவை செய்யத் தயாராக உள்ள உள்ளங்கள் மிக மிக அறிது. போற்றுதலுக்கு உறியது. வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Anandan P - Chennai,இந்தியா
19-மே-202113:59:15 IST Report Abuse
Anandan P உங்களை போன்ற செவிலியர்கல் தான் உண்மையில் வாழும் தெய்வங்கள், வாழ்த்துகள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X