அரசியல் செய்தி

தமிழ்நாடு

வாழ்த்து சொல்ல வந்தாங்களாம்! அமைச்சர் மகேஷ் மழுப்பல்

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (117)
Share
Advertisement
திருச்சி ;'கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், தனக்கு வாழ்த்து தெரிவிக்கவே கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்' என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:நான் அமைச்சரானதற்கு வாழ்த்து சொல்ல, கலெக்டர், கமிஷனர்கள் என் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அதிர்ச்சிஅப்போது, கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்ததால்,
அமைச்சர், மகேஷ், வாழ்த்து ,சொல்ல வந்தார்கள், மழுப்பல்

திருச்சி ;'கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள், தனக்கு வாழ்த்து தெரிவிக்கவே கட்சி அலுவலகத்திற்கு வந்தனர்' என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்
தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:நான் அமைச்சரானதற்கு வாழ்த்து சொல்ல, கலெக்டர், கமிஷனர்கள் என் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். அதிர்ச்சிஅப்போது, கொரோனா தடுப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து கொண்டிருந்ததால், அவர்களும் பங்கேற்று சில கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.


latest tamil news


அரசு ஊழியர் என்ற முறையில், என் அலுவலகத்தில் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதை அறிவேன். செய்திகளில் வந்தது போல், இது முன்னரே உத்தேசிக்கப்பட்ட கூட்டம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைத்து விட்டு, தனக்கு பிரச்னை என்றதும், அதிகாரிகளை பலிகடா ஆக்கும் வகையில் அறிக்கை விட்டுள்ள அமைச்சரின் செயலால், கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் தரப்புகடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது.


பதவி நீக்கம்


இதற்கிடையில், திருச்சி அ.தி.மு.க., முன்னாள் எம்.பி., குமார், கவர்னருக்கு அனுப்பியுள்ள புகாரில், 'கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்தி, கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனரை பங்கேற்க வைத்தது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. 'எனவே, பள்ளிக்கல்வி அமைச்சரை பதவி நீக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-மே-202107:48:04 IST Report Abuse
DARMHAR APPADI ENNA MAHA MEDAAVIYAA
Rate this:
Cancel
Chandrasekaran - al khobar,சவுதி அரேபியா
23-மே-202113:42:02 IST Report Abuse
Chandrasekaran எப்படி வேலை பார்க்கணும்னு தெறியும் அவங்களுக்கு. பாவம் எல்லா IAS IPS அலுவலர்கள். விதியின் கொடுமை
Rate this:
Cancel
SENTHIL - tirumalai,இந்தியா
22-மே-202118:03:30 IST Report Abuse
SENTHIL இளைஞர்களை பதவியில் அமர்த்தினால் தங்கள் அதிகாரத்தை காண்பிக்க இப்படித்தான் ஏடா கூட மா ஏதாவது பண்ணுவாங்க... அனுபவம் வேணும்னு இதுக்குதான் சொல்லுவாங்க பெரியவங்க.... வரும் கால இந்தியாவை உருவாக்க போகும் பள்ளி கல்வி துறையில் நல்ல அனுபவம் மிக்க ஒருவரை நியமிக்க வேண்டும் என தோன்றுகிறது இவற்றின் ஆரம்ப கட்ட செயல்பாடுகள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X