லிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல: பஞ்சாப் உயர்நீதிமன்றம்

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சண்டிகர் :'திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் -பெண்ணும் சேர்ந்து வாழும், 'லிவ் - இன் ரிலேஷன்ஷிப்' எனும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல' என, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குல்ஸா குமாரி, 19; குர்விந்தர் சிங், 22, ஆகியோர் காதலித்து வருகின்றனர். இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு
Live in, relationship, not acceptable, morally, socially, Punjab HC,லிவ் - இன் உறவு ஏற்புடையது அல்ல' : உயர்நீதிமன்றம்

சண்டிகர் :'திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் -பெண்ணும் சேர்ந்து வாழும், 'லிவ் - இன் ரிலேஷன்ஷிப்' எனும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல' என, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குல்ஸா குமாரி, 19; குர்விந்தர் சிங், 22, ஆகியோர் காதலித்து வருகின்றனர். இதற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.இதையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய குல்ஸா குமாரி, காதலன் குர்விந்தருடன் சேர்ந்து வாழ்கிறார்.


latest tamil news



இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளனர்.ஆதார் அட்டைஉள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பெண் வீட்டில் இருப்பதால், திருமணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதுவரையில், ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் தங்கள் உயிருக்கு பாதுாப்பு வழங்கும்படி, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில், காதல் ஜோடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, 'திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும் - பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வாழும் உறவு, ஒழுக்க ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்புடையது அல்ல' என உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-மே-202105:58:14 IST Report Abuse
meenakshisundaram ....போராட்டம் நடத்தியவர்கள் என்ன பதில் கூறுவார்கள் ?
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
19-மே-202117:03:49 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு தகாத உறவு இஸ்லாத்திலும் ஏற்புடையது அல்ல இந்த தீர்ப்பை பாராட்ட பச்சைகளுக்கு என்ன தயக்கம் ?
Rate this:
Cancel
B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,சவுதி அரேபியா
19-மே-202114:09:30 IST Report Abuse
B. இராமச்சந்திரன் வயதுவந்த யாரும் யாருடனும் அவர்கள் விருப்பத்தின் பேரில் உறவு வைக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணாக உள்ளதே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X