அரசியல் செய்தி

தமிழ்நாடு

விஜயகாந்த் உடல் நிலை சீராக உள்ளது: தேமுதிக

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக அறிக்கை வெளியிட்டு உள்ளது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால், அதிகாலை 3.30 மணிக்கு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
Vijayakanth, admitted, hospital,DMDK, விஜயகாந்த்

சென்னை: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக அறிக்கை வெளியிட்டு உள்ளது.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் ஏற்பட்ட காரணத்தால், அதிகாலை 3.30 மணிக்கு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது, விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மேலும் சிகிச்சை ஓரிரு நாளில் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன், உடல்நலக் குறைவால், சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிலிருந்தே, விஜயகாந்த் வீட்டிலேயே இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில், பங்கேற்பது இல்லை.


latest tamil news



கடந்த ஆண்டு கொரோனா முதல் அலையின் போது, அவருக்கு தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலம் பெற்றிருந்தார். தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தலில், காரில் இருந்தபடி, கையசைத்து மட்டும் அவர் பிரசாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
19-மே-202118:52:17 IST Report Abuse
S. Narayanan நலமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம்
Rate this:
Cancel
seshadri - chennai,இந்தியா
19-மே-202116:26:40 IST Report Abuse
seshadri மிக நல்ல மனிதர் பரோபகார சிந்தை உள்ளவர் மற்றவர்களுக்கு உதவும் குணம் கொண்டவர். விரைவில் பூரண குணம் பெற்று மீண்டு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
19-மே-202115:23:13 IST Report Abuse
RaajaRaja Cholan பத்து வருடத்திற்கு முன்பு பார்த்த கம்பீர குரலுடன் அதே மிடுக்குடன் மீண்டு வந்தால் சிறப்பு இறைவனின் கருணை பார்வை கிடைத்தால்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X