அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோயில் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (111)
Share
Advertisement
சென்னை: அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில்
அறநிலையத்துறை, சொத்துஆவணங்கள், அமைச்சர், சேகர்பாபு, உத்தரவு

சென்னை: அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள் மற்றும் இணையப்பதிவேற்றம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலில், அறநிலையத்துறை அமைச்சர் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.


latest tamil news


1. கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள் மற்றும் விழாக்கள் போன்ற தகவல்களை இணையத்தில் வெளியிட வேண்டும்.
2. கோயில்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு பதிவேடுகளை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. கோயில் நிலங்கள் மற்றும் கட்டடங்களின் விவரங்களை, பொதுமக்கள் கணினிவழியில் பார்வையிடும் வகையில் புவிசார் குறியீடு செய்து இணையத்தில் வெளியிட வேண்டும்.
4. கோயில் பெயரில் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளின் உரிமை ஆவணங்களை ஸ்கேன் செய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
5. கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்றல், நியாய வாடகை வசூலித்தல் மற்றும் கோயில் வருவாயினங்களைப் பெருக்கும் வகையில் விரைந்து செயல்பட வேண்டும்.
- இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (111)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.G.RAMAN - MADURAI,இந்தியா
25-மே-202115:25:43 IST Report Abuse
N.G.RAMAN இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் அனைவரும் இந்து மதத்தின் மீது முழு நம்பிக்கை உள்ள இந்துக்களாக இருக்க வேண்டும். வேறு மதம் மாறியவர்கள், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் அறநிலையத்துறை ஊழியர்களாக இருக்க கூடாது. அவர்களுக்கு கோவில் வருமானத்துக்கு ஏற்ற கவுரவ ஊதியம் வழங்க வேண்டுமே தவிர மற்ற அரசுத்துறை போன்று சம்பளம் வழங்க கூடாது. கடவுளைக் காண கட்டணம் வசூலிக்க கூடாது. அர்ச்சனை சீட்டு பிரார்த்தனை கட்டணம் என்று பல்வேறு வகைகளில் பணம் வசூலிக்க கூடாது. லயோலா கல்லுரியை அறநிலையத் துறை ஏற்று நடத்த வேண்டும். VIP களுக்கு என்று சிறப்பு தரிசனம் கூடாது. கடவுள் முன்னே அனைவரும் சமம் என்பது உறுதி செய்யப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் இணையதளத்திலும் கோவிலில் மக்கள் பார்க்கும் வகையிலும் வைக்கப்பட வேண்டும். அறநிலைய துறை அலுவலகம் கோவில் உள்ளே இருக்க கூடாது. கோவிலின் வெளிப்புறம்தான் இறுக வேண்டும்
Rate this:
Cancel
Subramanian Narayanaswamy - Madurai,இந்தியா
23-மே-202111:41:25 IST Report Abuse
Subramanian Narayanaswamy இந்துக்கள் பெயரில் எத்தனை கிறித்துவர்கள் அறநிலை துறையில் வேலை செய்கிறார்கள் என தெரியுமா? லயோலா காலேஜ் சிவன்கோயில் சொட்டில்தான் உள்ளது. பரஞ்சோதிக்கு அது தெரியாத? முதலில் அதை காலிசெய்து கொடுக்க சொல்லுங்கள். கோயில் சொத்தை அட்டை போட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யுங்கள்.
Rate this:
Cancel
ஷண்முகபிரியன் - AMBATTUR,இந்தியா
22-மே-202121:32:28 IST Report Abuse
ஷண்முகபிரியன் மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேர் எனபது குறிப்பிடத்தக்கது.கபாலி கோயில் சொத்துக்களைக் கொள்ளையிடும் பட்டியல் பெரிது. வாடகை கொடுக்காத பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன். கல்வியைப் பரப்புவது என்ற பெயரில் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் வாடகை பாக்கி 32 இலட்ச ரூபாய். அடுத்தது, மயிலாப்பூர் கிளப். ஜனவரி,1, 1903 அன்று தொடங்கப்பட்ட பெருந்தனக்காரர்களின் தனி உடைமை கிளப்பான இது, கிரிக்கெட், டென்னிஸ் விளையாட்டுகளுக்கு தயார்படுத்தும் பயிற்சித் திடல், உறுப்பினர்களுக்குச் சீட்டாட்டம், டென்னிஸ், டேபிள் டென்னிஸ், ஜிம், வட இந்தியதென் இந்திய உணவு விடுதிகள் மற்றும் 24 மணி நேர பார் போன்ற வசதிகள், என பல கிரவுண்டு கோயில் நிலத்தைக் குத்தகைக்கு வளைத்துப் போட்டிருக்கும் இந்த ஆன்மீக மெய்யன்பர்கள் கபாலிக்கு வைத்திருக்கும் குத்தகை பாக்கி 3.57 கோடி ரூபாய். 'தேசியத் தலைவர்' எனப் 'பெத்த பேர்' வாங்கிய நாகேஸ்வர ராவினால் ஆரம்பிக்கப்பட்டு, ஊருக்கெல்லாம் தலைவலி தைலம் தரும் அமிருதாஞ்சன் நிறுவனம் கபாலீசுவரருக்கு வைத்திருக்கும் குத்தகைப் பாக்கி ரூ.6 கோடியே 45 இலட்சம். கல்விக்கும் ஒழுக்கத்துக்கும் பேர் போனதாக மெச்சிக் கொள்ளப்படுவது பி.எஸ். ஹைஸ்கூல் கோயிலுக்குச் சொந்தமான 76 கிரவுண்ட் நிலத்தை 1928-இல் குத்தகைக்கு எடுத்தது. பின்னர் குத்தகை ஒப்பந்தம் 1979-இல் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இன்று ஒரு கிரவுண்ட் நிலத்தின் சந்தை விலை ரூ.5 கோடிக்கும் மேலாகும். பல பிரபல உயரதிகாரிகளை உருவாக்கியதாகப் பீற்றிக்கொள்ளும் இந்தப்பள்ளி, 76 கிரவுண்டுகளுக்கு ஆண்டு குத்தகையாக ரூ. 1250 ஐ மட்டும் ஒரே ஒருமுறை தந்துவிட்டு, கபாலீசுவரரைக் கோர்ட்டுக்கு இழுத்து வாய்தாவுக்கு அலைய விட்டுக் கொண்டிருக்கிறது. மயிலாப்பூரில் காமதேனு திரையரங்குக்கு எதிரே கபாலீசுவரருக்குச் சொந்தமான 25 கிரவுண்ட் நிலத்தை ஆக்கிரமித்திருப்பவர் பார்த்தசாரதி அய்யங்கார். இன்று அந்த நிலத்தின் மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல். 1901- இல் 99 வருடக் குத்தகையாக எடுத்தவர்கள் இதனை உள்குத்தகைக்கு விட்டு, அது பல கை மாறி இன்று வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் எழுப்பப்பட்டு, 35 பேர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. இப்படியே போகிறது பட்டியல். முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பாரம்பரியமிக்க பெரிய மனிதர்களின் கிளப் என்று கூறப்படும் மயிலாப்பூர் கிளப்பின் வாசலில், “இது கபாலீசுவரர் கோயில் சொத்து” என்று போர்டு எழுதி வைத்திருக்கிறது இந்து அறநிலையத்துறை. இதையெல்லாம் பார்த்துக் கூச்சப்பட்டு சொத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்களா என்ன? அற்ப வாடகை, குத்தகை பாக்கியைக்கூடக் கொடுக்காமல், அறநிலையத்துறையை இவர்கள் கோர்ட்டுக்கு இழுப்பதன் நோக்கமே கோயில் சொத்தை விழுங்குவதுதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X