கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதிநிதியாக பேசக்கூடாது: மத்திய அமைச்சர் கண்டிப்பு

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (56) | |
Advertisement
புதுடில்லி: 'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதிநிதியாகப் பேசக்கூடாது' என, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், 'சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது.

புதுடில்லி: 'டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவின் பிரதிநிதியாகப் பேசக்கூடாது' என, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் மத்திய அரசுக்கு நேற்று ஒரு கோரிக்கை விடுத்தார். அதில், 'சிங்கப்பூரில் உருமாற்றம் அடைந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானது. சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து விமானச் சேவைகளையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார்.



latest tamil news




இதற்கு சிங்கப்பூர் அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம், 'சிங்கப்பூரில் புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் உருவாகியுள்ளதாக சிலர் கூறும் கருத்துகள் உண்மைக்கு மாறானாவை. சிங்கப்பூரில் எந்தவிதமான புதிய உருமாற்ற கொரோனா வைரசும் இல்லை. கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உடலில் இருப்பது இந்தியாவில் உருவானதாகக் கூறப்படும் பி.1.617.2 வகை வைரஸ்தான்' எனத் தெரிவித்தது. மேலும், ஆதாரமற்ற தகவல்களை நம்பி, சிங்கப்பூர் குறித்து கெஜ்ரிவால் கூறியதற்கு சிங்கப்பூர் அரசு கடும் கண்டனம் தெரிவித்து, இந்தியத் தூதரை அழைத்து வருத்தத்தைத் தெரிவித்தது.





latest tamil news



இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியாவும், சிங்கப்பூரும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்தியாவுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது விரைந்து ஆக்சிஜன் சப்ளை செய்த சிங்கப்பூர் அரசின் செயல்கள் பாராட்டுக்குரியவை. அவர்களின் ராணுவ விமானத்தின் மூலம் ஆக்சிஜனை வழங்கி, இரு நாடுகளுக்கும் இடையிலான வலிமையான உறவை வெளிப்படுத்தியுள்ளார்கள். நன்கு தெரிந்துகொள்ள வேண்டியவர்களிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவது நீண்டகால நட்புறவைச் சேதப்படுத்தும். இந்தியாவின் பிரதிநிதியாக டில்லி முதல்வர் பேசக்கூடாது' என, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு கேஜ்ரிவாலும் மம்தாய்பேகமும் தமிழக திராவிட கழிசடைகளை போல ஒரு வியாதி
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
20-மே-202108:48:39 IST Report Abuse
Sampath Kumar அவரு என்ன சொலவராற் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் கூடாது கூடாது என்று சொல்வது என்ன நியாயம் ??? அதிகாரத்தின் வெளிப்பாடு அன்றி வேறு என்ன ?
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
20-மே-202108:48:21 IST Report Abuse
shyamnats திரு ஜெய்சங்கர் அவர்கள், ட்விட்டரில் பதில் அளிப்பதை விட அரசின் முறையான கடிதம் வாயிலாக கெஜ்ரிவாலுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஆக்சிஜென் இல்லாததால் அதிக இறப்பு என்றவர், மத்திய அரசு ஆய்வு செய்யும் என்றவுடன் , தேவைக்கு மேல் இருப்பதாக அறிவித்தார். சுய நல கோமாளிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X