கடந்த வாரத்தில் 13% பாதிப்பை குறைத்துள்ள இந்தியா: உலக சுகாதார அமைப்பு

Added : மே 19, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
ஜெனிவா: இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.கடந்த ஒரு வாரத்துக்கான கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் கடந்த ஒரு வாரத்தில் 48 லட்சம் பேர் கொரோனா தொற்றால்
WHO, India, NewCovidCases, 13Percent, Fall, HighestGlobally, கொரோனா, பாதிப்பு, இந்தியா, உலக சுகாதார அமைப்பு

ஜெனிவா: இந்தியாவில் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைந்துள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்துக்கான கொரோனா வைரஸ் தொற்று புள்ளிவிவரங்கள் குறித்த அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலக அளவில் கடந்த ஒரு வாரத்தில் 48 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 86 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் பாதிப்பு 12 சதவீதமும், உயிரிழப்பில் 5 சதவீதமும் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது.


latest tamil news


இந்தியாவில் கடந்த வாரத்தில் புதிதாக 23 லட்சத்து 87 ஆயிரத்து 663 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு என்பது 16ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் 13 சதவீதம் குறைவாகும். உலக நாடுகளில் கடந்த வாரத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் 13 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது பாதிப்பின் அளவில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. உயிரிழப்புகளைப் பொறுத்தவரை இந்தியாவில் 27,992 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-மே-202121:39:10 IST Report Abuse
sankaseshan நாங்க நம்பமாட்டோம் மோடி இவங்களுக்கு பணம் கொடுத்து ஆதரவாக எழுத செய்திருக்கிறார் .
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
19-மே-202118:47:22 IST Report Abuse
Poongavoor Raghupathy முக கவசம் சமூக இடைவெளி கடவுளிடம் அசராத நம்பிக்கை காரோணவிலுருந்து விடுபட இதுதான் வழி என்று தெரிகிறது. இந்த காரோண டாக்டர்களின் பிடியில் இதுவரை சிக்கவில்லை. ஆதலினால் காரோண கடவுள் தான் காப்பாற்றவேண்டும் . எல்லோரும் கடவுளை வேண்டுவோம் முகக்கவசம் சமூக இடைவெளி முக்கியம்.
Rate this:
Cancel
19-மே-202117:01:36 IST Report Abuse
ஆரூர் ரங் விடியல் வந்தாச்சு😆. நாட்டிலேயே கொரோனா பரவலில் முதலிடம்👍. ஏப்ரல் 6 லேயே சொந்த தலையில் மணல் அள்ளிப் போட்டுக்கிட்டாச்சு 😇. 2000 மும் செரிச்சாச்சு .🤑 இரண்டாயிரத்துக்கே இலவச ஒருநாள் பரப்பும் திட்டம் அமல்
Rate this:
Appan - ,
19-மே-202120:46:04 IST Report Abuse
Appanஏதோ இவனுக கொஞ்சமாவது உண்மை சொல்றானுக....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X