பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் 'கொரோனா தேவி' சிலை: 48 நாட்கள் சிறப்பு பூஜை!

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (47)
Share
Advertisement
கோவை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் 'கொரோனா தேவி' என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா

கோவை: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், கோவையில் 'கொரோனா தேவி' என்ற பெயரில் அம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு, 48 நாட்கள் சிறப்பு பூஜைக்கு பின், பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.



latest tamil news



கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இளம் வயதைச் சேர்ந்த பலரும் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து தப்பிக்க, கோவையில், 'கொரோனா தேவி' சிலையை உருவாக்கி அதற்கு பூஜைகள் செய்ய துவங்கியுள்ளனர்.கோவை காமாட்சிபுரி பகுதியிலுள்ள 51வது சக்தி பீடத்தில் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வரா ஊடகங்களுக்கு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news



கோவிட்19 என்ற வைரஸ், மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இதை மனதில் வைத்து, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம். பிளேக் நோய் பரவியபோது, பிளேக் மாரியம்மன் சிலை வடிவமைக்கப்பட்டு வழிபடப்பட்டது. காலரா, பிளேக் போன்ற கொள்ளை நோய்களின்போது, தங்களை காப்பாற்ற, அம்மனை வழிபட்டது வரலாறு.

கடவுள் மட்டுமே ஒரே நம்பிக்கை என்ற நிலையில், இதுபோல சிலைகள் வடிக்கப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. அதே மாதிரிதான், கொரோனாவின் கோரத் தாண்டவத்தை நிறுத்த, கொரோனா தேவி சிலையை வடித்துள்ளோம்.48 நாட்கள் மகா யக்ஞம் நடத்தி, வழிபடுவோம். பக்தர்களுக்கு இந்த காலகட்டத்தில் பூஜையில் கலந்து கொள்ள அனுமதியில்லை. கோவில் பூசாரிகள் மட்டுமே பூஜைகள் நடத்துவார்கள். மாரியம்மன், மாகாளியம்மன் வழிபாட்டை போலவே, கொரோனா தேவி வழிபாடும் முக்கியமானது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ARTICLE 356 அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி ஆன்டி வைரஸ்...
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு பூணுல் போடாத பூசாரிகள் என்பதால் கழகமும் அதன் அடிவருடிகளும் அமைதி காப்பார்கள்
Rate this:
Amal Anandan - chennai,இந்தியா
22-மே-202107:20:39 IST Report Abuse
Amal Anandanசெம்ம அறிவுயா உனக்கு....
Rate this:
Yesappa - Bangalore,இந்தியா
23-மே-202114:37:33 IST Report Abuse
Yesappaஉன்னை தானே அமலு... பூணூல் போட்டிருந்தா ஓ சி சோறு , திருமா அப்பறம் உங்க கன்வர்ட்டட் வைகோ எல்லாம் துள்ளி குதிச்சி ருப்பாங்க...
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
20-மே-202106:45:18 IST Report Abuse
Svs Yaadum oore //....உபி, பீகார் என்று இந்தியா முழுக்க இப்போ பிரச்சினைதான்....//....அப்ப தமிழ் நாட்டுக்காரனும் பானி பூரி பீட வாயன மாறிட்டானுங்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X