பொது செய்தி

தமிழ்நாடு

'இ - பதிவு' உதவிக்கு இலவச எண் அழைத்தால் பேச ஆளே இல்லை

Updated : மே 21, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை:'இ - பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா உதவி எண்ணுக்கு அழைத்தால் யாரும் பேசுவதில்லை; ஒரு நிமிடம் முடிந்ததும், அழைப்பு தானாகவே துண்டிக்கப்படுகிறது' என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அவசர தேவைகள் தவிர்த்து, வெளியில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு
இ - பதிவு உதவி, இலவச எண், பேச, ஆளே இல்லை

சென்னை:'இ - பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு, கட்டணமில்லா உதவி எண்ணுக்கு அழைத்தால் யாரும் பேசுவதில்லை; ஒரு நிமிடம் முடிந்ததும், அழைப்பு தானாகவே துண்டிக்கப்படுகிறது' என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, தமிழகம் முழுதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அவசர தேவைகள் தவிர்த்து, வெளியில் செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மருத்துவ சேவை, முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டத்திற்குள் செல்ல, eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.இந்த பதிவில் சந்தேகங்கள் ஏற்பட்டால், 1800 4251 333 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். இந்த எண்ணில் தொடர்பு கொண்டும், எந்த பயனும் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:பயணங்களை மேற்கொள்ள, இ - பதிவு அவசியம். இதில், திருமணத்திற்கு செல்ல, எவ்வாறு விண்ணப்பிப்பது; ரயிலில் சென்றால் எவ்வாறு விண்ணப்பிப்பது; ஒரு இடத்திற்கு சென்று, மீண்டும் வீடு திரும்புவதற்கு எவ்வாறு பதிவு செய்வது என, ஏராளமான சந்தேகங்கள் உள்ளன.
இது தொடர்பாக அறிந்து கொள்ள, தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககத்தின் இணையதளத்தில், கட்டணமில்லா தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுஉள்ளது.அந்த எண்ணிற்கு அழைத்தால், 'டிஎன் ஸ்டேட் இ -- பாஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்ததற்கு நன்றி; எங்கள் பிரதிநிதிகள் பிற அழைப்புகளில் பிசியாக உள்ளனர்; அதுவரை அழைப்பில் காத்திருங்கள்' என, பதிவு செய்யப்பட்ட குரல், தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு நிமிடம் முடிந்ததும், அந்த இணைப்பு தானாக துண்டிக்கப்படுகிறது. பிரதிநிதிகள் யாரும் பேசுவதில்லை. எப்போது அழைத்தாலும் இதே போன்றுதான் நடக்கிறது. இதை சரி செய்து, பொது மக்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
20-மே-202122:11:03 IST Report Abuse
S. Narayanan இது மட்டுமல்ல. அரசு கொடுக்கும் phone number ethical வேலை செய்யாது. இதெல்லாம் வெற்று அறிவிப்பு தான். வெற்று பப்ளிசிட்டி. யாரும் ஏமாற வேண்டாம்.
Rate this:
Cancel
unmaitamil - seoul,தென் கொரியா
20-மே-202116:57:50 IST Report Abuse
unmaitamil சுடலை, தன் தொகுதி மக்களின் குறைதீர்க்க, தானே ஏற்படுத்திய குறைதீர்க்கும் போன் நம்பருக்கு, சுடலை தானே போன் செய்தபோது , இந்த நம்பர் உபயோகத்தில் இல்லை என்று தானே கேட்டு பொது மேடையில் அசிங்கப்பட்டவர், இந்த ...நிர்வாக திறமை சிறிதும் இல்லாதவர். அடுத்த ஐந்து ஆண்டு அரசு நிர்வாகம் அம்பேல்தான்
Rate this:
Cancel
Jaishankar C - Chennai,இந்தியா
20-மே-202115:09:43 IST Report Abuse
Jaishankar C எந்த ஆட்சி வந்தாலும் போனை அட்டென்ட் பண்ணுற டீம் அதே மனிதநேயமற்றது தான். மோடி அடிச்சாலும் எடுக்க மாட்டோம் ஸ்டாலின் அடிச்சாலும் எடுக்க மாட்டோம் . எதுல நீ யாரை குறைகூறினால் யாருக்கென்ன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X