பொது செய்தி

இந்தியா

தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு 3 மாதத்துக்கு பின் தடுப்பூசி: அரசு

Updated : மே 19, 2021 | Added : மே 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, மூன்று மாதங்களுக்கு பின், தடுப்பூசி போடப்பட வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், கொரோனா பரவலை தடுக்க, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, குணமடைந்தோருக்கு தடுப்பூசி போடுவது பற்றி, தடுப்பூசி நிர்வாகத்துக்கான
 தொற்று, பாதிப்பு, 3 மாதம், தடுப்பூசி: அரசு

புதுடில்லி:'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு, மூன்று மாதங்களுக்கு பின், தடுப்பூசி போடப்பட வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில், கொரோனா பரவலை தடுக்க, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி, குணமடைந்தோருக்கு தடுப்பூசி போடுவது பற்றி, தடுப்பூசி நிர்வாகத்துக்கான தேசிய நிபுணர் குழு தெரிவித்த பரிந்துரைகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டுள்ளது.


latest tamil news


இது பற்றி, சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா பாதிப்புக்குள்ளாகி, குணமடைந்தோருக்கு, மூன்று மாதங்களுக்கு பின், தடுப்பூசி போடலாம். முதல், 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்ட பின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கும், குணமடைந்து, மூன்று மாதங்களுக்குப் பின், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடலாம். மேலும், பாலுாட்டும் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். கர்ப்பிணியருக்கு தடுப்பூசி போடுவது பற்றி, தேசிய நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழு, ஆலோசனை நடத்தி வருகிறது. விரைவில் இது தொடர்பான பரிந்துரைகளை அக்குழு அளிக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-மே-202112:25:39 IST Report Abuse
Ramesh Sargam வொவொரு நாள் வொவொரு அறிவிப்பு. அதுவும் முரண்பாடான அறிவிப்பு. அதுவும் வைரஸிலிருந்து குணமடைந்தவர்கள், முதல் தடுப்பூசியாகட்டும், அல்லது இரண்டாவது ஆகட்டும், எப்பொழுது போட்டுக்கொள்ளவேண்டும் என்று ஒரு கேள்வி/சந்தேகம். பத்திரிகைகளில் தினம் ஒரு செய்தி. மருத்துவத்துறையே மிகவும் குழம்பி போயிருக்கிறது.
Rate this:
Cancel
S.Subramanian - Chennai,இந்தியா
20-மே-202110:37:52 IST Report Abuse
S.Subramanian தடுப்பூசி மருந்து அவ்வளவாக கையிருப்பில் இல்லை. அதனால் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மூன்று மாதங்கள் கழித்து போடலாம் என்றார்கள். இப்போது கொரானா வந்து குணமானவர்களும் மூன்று மாதங்கள் கழித்து தான் தடுப்பூசி போடவேண்டும் எங்கிறார்கள். என்னமோ... நடக்கிறது. எதுவும் நல்ல விஷயமாகத் தெரியவில்லை.. ஆண்டவன் தான் நம்மை காப்பற்ற வேண்டும்.
Rate this:
Cancel
20-மே-202109:18:11 IST Report Abuse
Ramesh Sargam 0...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X