பொது செய்தி

தமிழ்நாடு

திருமணத்திற்கு 'இ - பதிவு' உண்டு : பத்திரிகையில் பெயர் கட்டாயம்

Updated : மே 20, 2021 | Added : மே 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை:'திருமண பத்திரிகையில் பெயர் இருப்பவர் மட்டுமே, இ - பதிவு செய்ய முடியும்; ஒரு நிகழ்வுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் செய்தால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.மருத்துவ சேவை, முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டத்திற்குள் செல்ல, eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு
 திருமணத்திற்கு 'இ - பதிவு' உண்டு : பத்திரிகையில் பெயர் கட்டாயம்

சென்னை:'திருமண பத்திரிகையில் பெயர் இருப்பவர் மட்டுமே, இ - பதிவு செய்ய முடியும்; ஒரு நிகழ்வுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் செய்தால், குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கப்பட்டு உள்ளது.

மருத்துவ சேவை, முதியோர் பராமரிப்பு, இறப்பு மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, மாவட்டத்திற்குள் செல்ல, eregister.tnega.org என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.தற்போது, திருமணத்திற்கு செல்வதற்கான பிரிவு, கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பிரிவு, மிகப் பெரிய சிக்கலாக இருக்கிறது.

இ - பதிவு இணையதளத்தில், மொபைல் எண் வழங்கி, உள்ளே சென்றதும், திருமணத்திற்கு செல்வதற்காக பதிவு செய்ய, தனிப்பிரிவு வழங்கப்பட்டு உள்ளது.அதை, 'கிளிக்' செய்ததும், முக்கியமான அறிவிப்பு என, திரையில் தோன்றுகிறது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:திருமண நிகழ்விற்கு வரும் அத்தனை விருந்தினர்களுக்கும் சேர்த்து, ஒரு பதிவு மட்டுமே செய்ய வேண்டும். ஒரே பதிவிலேயே அனைத்து வாகனங்களுக்கும், இ - பதிவு செய்ய வழி வகுக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர் பெயர், பத்திரிகையில் இருக்க வேண்டும்.திருமண அழைப்பிதழை கண்டிப்பாக பதிவேற்ற செய்ய வேண்டும். தவறான தகவல் தந்திருந்தாலோ, ஒரு நிகழ்விற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட, இ - பதிவுகள் செய்திருந்தாலோ, தொற்று நோய்கள் சட்டம், பேரழிவு மேலாண்மை சட்டம் ஆகியவற்றின் கீழ், சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.


latest tamil news


வாகனங்களின் எண்கள், டிரைவர் பெயர், மொபைல் போன் எண், அதில் பயணிக்கும் ஒவ்வொருவருடைய பெயரையும் குறிப்பிட வேண்டும். ஏதேனும் ஒரு அரசு அடையாள அட்டை வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கில் யாரும் பயணிக்கக் கூடாது என்பதற்காகவே, இத்தகைய கெடுபிடிகள்,இ - பதிவில் செய்யப்பட்டு உள்ளன. கடந்த 16ம் தேதி முதல், தற்போது வரை, 4.5 லட்சம் பேர்,'இ - பதிவு' செய்துள்ளனர். தெளிவான வழிகாட்டுதல்கள் இருந்தால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
20-மே-202117:50:59 IST Report Abuse
கல்யாணராமன் சு. வெவ்வேறு ஊரிலிருந்து வரும் விருந்தினர்கள் எப்படி பதிவு செய்வார்கள் ??
Rate this:
Cancel
பொறியாளன் இளங்கோ அமேரிக்கா போக வீசா கூட கெடைச்சிடும் போல இருக்கு. இவங்களுக்கு உடம்பு புள்ளா மூளைங்கோ ஆனா மூளை வேலை தான் சரியா செய்யுறதில்ல.
Rate this:
Cancel
David DS - kayathar,இந்தியா
20-மே-202113:16:12 IST Report Abuse
David DS அரசு அலுவலர்கள் யோசிக்கவே மாட்டார்களா? எல்லாரும் பத்திரிகையில் பெயர் போடுவதில்லை. பிரின்டிங் பிரஸ் இல்லம் மூட சொன்னா, எப்படி பத்திரிகை அடிப்பாங்க?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X