தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?; மே 22ல் ஸ்டாலின் ஆலோசனை

Added : மே 20, 2021 | கருத்துகள் (50) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அனைத்து கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் மே 22ல் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின்
TamilnaduCM, Stalin, Lockdown, Extend, தமிழகம், ஊரடங்கு, நீட்டிப்பு, முதல்வர், ஸ்டாலின், குழு, ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல், ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அனைத்து கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.,க்கள் குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் மே 22ல் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழக அரசு கொரோனா எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையில் இடம் பெற்றுள்ள, 13 கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அவசர அவசியம் கருதி, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தம் வழிமுறைகள் குறித்து, ஆலோசனைகள் பெற, அவ்வப்போது கூடி விவாதிக்கும் என்றும், பொதுத்துறை செயலர் குழுவின் உறுப்பினர் செயலராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரும் இடம்பெற்றிருந்தார்.


latest tamil news


இதற்கிடையே, தமிழகத்தில் தற்போது சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நியமிக்கப்பட்டது. இது வரும் 24ம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மாநிலத்தில் தொற்று பரவல் குறைந்தபாடில்லை. இதனால், நாளை மறுநாள் (மே 22) காலை 11:30 மணிக்கு தலைமை செயலகத்தில் 13 எம்எல்ஏ.,க்கள் அடங்கிய குழுவுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதில், கொரோனா பரவல், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழு உறுப்பினர்களிடம் பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-202113:37:59 IST Report Abuse
kulandhai Kannan ஸ்டாலின் ரோசக்காரர். போனமாதம் வரை லாக் டவுனை எதிர்த்துக் பேசிட்டு, இப்போது நீட்டிக்க மாட்டார்.
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
21-மே-202106:28:39 IST Report Abuse
Svs Yaadum oore தடுப்பூசி ரெம்டெஸிவிர் ஆக்சிஜன் மோடி தரவில்லை என்றால் 39 கான்டீன் டோகேன்கள் டெல்லியில் என்ன செய்றாங்க ??....உண்மையான தகவல் அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதி மன்றம் கண்டித்துள்ளது ...அதற்கும் மோடி காரணமா ...இவனுங்களுக்கு ஆட்சி செய்ய தெரியவில்லை யென்றால் மோடி , உபி பிஹாரி பனி பூரி என்று திசை திருப்ப தெரியுமே தவிர முறையான பதில் வராது ....
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-மே-202123:34:11 IST Report Abuse
Pugazh V தடுப்பூசி வேண்டும் ரெம்டெஸிவிர் வேண்டும் ஆக்சிஜன் வேண்டும் என்று யாரும் மோடியிடம் கெஞ்சவில்லை. அவரிடம் இதெல்லாம் இல்லவும் இல்லை. தமிழக அரசு.இந்த மருந்து களுக்கு க்ளோபல் டெண்டர் கோரியிருக்கிறது. மோடியால் கையாலாகவில்லை என்று அவரே ஒத்துக் கொண்டு, "என்னால முடியல, அந்தந்த மாநில.அரசுகள் வாங்கிக்கலாம் என்று சொல்லி ஜகை கழுவிட்டார். இந்த நிலைமைக்கு இந்தியா வை ஆளாக்கிய.மோடி இதுக்கப்புறம் தமிழகம் வந்தால் கோ பேக் மோடி தான். மீண்டும். இனி, இவர் தமிழகம் வந்தால் மட்டும் அல்ல. உபி குஜராத் தவிர எங்கே வந்தாலும் கோ பேக் மோடி தான். வீட்டை வுட்டு வெளியவே வரமுடியாது. நேரே.அயல்நாடு போக வேண்டியது தான். ஆனால்23 நாடுகளில் இந்தியர்களுக்கு தடை.
Rate this:
21-மே-202105:56:13 IST Report Abuse
மனுநீதிமொதல்ல தமிழ்நாட்டில் இருப்பவன் கொரோணாவில் தங்களை பாதுகாத்துக் கொள்ளுங்ள். உயிரோடு இருந்தால் அப்புறம் சொல்லலாம் கோ பாக் மோடின்னு. இப்படித்தான் தடுப்பூசி விவகாரத்திலும் பேசினானுங்க இந்த கெரகம் புடிச்சவங்க. உலகளாவிய டெண்டர் எதற்காக? வசதியா கொள்ளை அடிப்பதற்காக. வெட்டுபவனைத்தான் ஆடு நம்புமாம்....
Rate this:
sridhar - Chennai,இந்தியா
21-மே-202107:03:20 IST Report Abuse
sridharநல்ல கற்பனை . ஆனால் வடக்கே வாக்காளர்கள் தெளிவான அறிவோடு செயல்படுகிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X