கொரோனா சூழலிலும் வெளிநாட்டு வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் இந்தியா: ஐ.நா.,

Updated : மே 20, 2021 | Added : மே 20, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
நியூயார்க்: கொரோனா பிரச்னைக்கு நடுவிலும், மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் சிறப்பான முறையில் இருந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.கொரோனா பாதிப்பால் அனைத்து தொழில் துறைகளும் முடங்கியதால், அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளன. அதிலிருந்து மீள்வதற்கான

நியூயார்க்: கொரோனா பிரச்னைக்கு நடுவிலும், மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் சிறப்பான முறையில் இருந்துள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பால் அனைத்து தொழில் துறைகளும் முடங்கியதால், அனைத்து நாடுகளும் கடுமையான பொருளாதார இழப்புகளைச் சந்தித்துள்ளன. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஐ.நா.,வின் வர்த்தக மேம்பாட்டுக்கான குழு, சர்வதேச அளவிலான வர்த்தக விவரங்களை நேற்று வெளியிட்டது. அதில் தெரிவித்துள்ளதாவது:latest tamil news2021ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் சர்வதேச அளவில் சரக்கு - சேவை வர்த்தகம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகரித்துள்ளது. 2021ன் முதலாவது காலாண்டில் இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகளும் மற்ற மிகப்பெரிய நாடுகளைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் வர்த்தகத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளன. இந்தியாவின் பொருள் இறக்குமதி 2020ம் ஆண்டு சராசரியுடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே காலகட்டத்தில் சேவைகளுக்கான இறக்குமதி 14 சதவீதம் அதிகரித்துள்ளது.


latest tamil newsஇதேபோல், 2021ம் ஆண்டின் முதலாவது காலாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 26 சதவீதம் அதிகரித்துள்ளது. சேவை ஏற்றுமதியும் 2 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக இதில், கொரோனா மருந்துகள், தகவல் தொடர்பு சாதனங்கள், தாது வளங்கள், வேளாண் விளைபொருளகள் தொடர்பான வா்த்தகம் அதிகரித்துள்ளது. ஆனால் இதற்கு மாறாக, எரிசக்தி துறை தொடர்ந்து பின்தங்கியிருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
20-மே-202121:46:11 IST Report Abuse
a natanasabapathy இங்கிருக்கும் உதவாக்கரைகள் மோடி பயனில்லாதவர் என்று ஒப்பாரி வைக்கின்றன
Rate this:
Raman - kottambatti,இந்தியா
21-மே-202105:54:14 IST Report Abuse
Ramanஒழுங்கா படி.. விஷயம் தெரியாமலே உளறுவதே சங்கிகள் பிழைப்பா ?...
Rate this:
RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ
21-மே-202108:27:32 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN"விஷயம் தெரியாமலே உளறுவதே சங்கிகள் பிழைப்பா ?..." வர்த்தகம் குறைஞ்சிருந்தா பிஜேபி அரசை மறக்காம குறை சொல்லுவோம்ல நாங்க யாரு ?...
Rate this:
Cancel
20-மே-202117:54:10 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் சங்கிகளைப் புகழ்வதிலேயே ஐ.நா. டைம் பாஸ் பண்ணுது இப்படிக்கு டூமீலன்ஸ்
Rate this:
Raman - kottambatti,இந்தியா
21-மே-202105:56:02 IST Report Abuse
Ramanஇந்த விவரத்தை எங்க போயி சரிபார்ப்பது.. ஹா ஹா ஹா உட்டு அடிக்க வேண்டியதுதான்.. கடைசியில் பார்த்தால் மன்னாரன் ஐ நா சபையா இருக்கும்.....
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
20-மே-202117:17:16 IST Report Abuse
Ramona உண்மை நிலை என்னவென்று இந்திய அரசியல் வாதி, பிரதிவாதிகளுக்கு பயப்படாமல் உலகிற்கு எடுத்துச் சொன்ன ஐ.நா வின் தைரியத்தை பாராட்ட வேண்டும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X