வீட்டிலிருந்து வெளிவர தடுப்பூசி செலுத்திய ஆதாரம் தேவை: சவுதி அரசு அதிரடி

Updated : மே 20, 2021 | Added : மே 20, 2021 | கருத்துகள் (20) | |
Advertisement
ரியாத்: 'சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள் காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் சமூக செயல்பாடுகளில் ஈடுபட முடியாது' என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: சவுதி அரேபியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும்

ரியாத்: 'சவுதி அரேபியாவில் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தை பொதுமக்கள் காண்பிக்க வேண்டும். இல்லையென்றால் சமூக செயல்பாடுகளில் ஈடுபட முடியாது' என, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news



சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: சவுதி அரேபியாவில் இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், தொற்றைக் குறைக்கவும் ஏப்ரல் மாதம் முதலே கொரோனா தடுப்பூசியை மக்களிடம் கொண்டு செல்வதில் சவுதி அரசு தீவிரம் காட்டி வருகிறது. சவுதியில் இதுவரை 1.1 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news



அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதை கட்டாயப்படுத்தும் விதமாக, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆதாரத்தைக் காட்டினால்தான் அரசு அலுவலங்கள், பேருந்துகள், பள்ளிகள் மற்றும் பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். இல்லாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

'கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம். கொரோனா 2வது அலைக்கு எதிராக சவுதி அரசின் இந்த முயற்சி பாராட்டுதலுக்கு உரியது. இதை அனைத்து நாடுகளும் பின்பற்றினால் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வர்; கொரோனா பரவல் குறையும்' என, மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
21-மே-202110:33:57 IST Report Abuse
Kumar போட்டுக் கொண்ட மாதிரி ஆதாரம் காட்டினால் அரபு நாட்டில் 77 சவுக்கடி கொடுப்பார்கள் வாங்க தயாரா? அது என்ன டிம்கெ ஆளும் தமிழ்நாடா? வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
21-மே-202110:31:42 IST Report Abuse
Kumar அரபு நாட்டில் தடுப்பூசி போடுவதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள், இங்க தமாஸ் செய்ய வேண்டும் என்று ஊரைச் சுற்ற வேண்டாம். செத்தால் தான் கடவுள் சொர்க்கத்தில் அனைத்தையும் தருவார். இங்க இருந்தால் கொரானவைதான் தருவார். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
21-மே-202109:30:07 IST Report Abuse
Vijayan Singapore இதையே நம் நாடு சொன்னால், தறுதலை புராணம், ஆப்பு போன்ற பொய் பெயர்களில் திரியும் மூர்க்க மார்கத்தினர் மோடியை குறைசொல்லுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X