இலவச தடுப்பூசி: முன்னாள் அதிகாரிகள் பிரதமருக்கு கடிதம்

Updated : மே 21, 2021 | Added : மே 21, 2021 | கருத்துகள் (61) | |
Advertisement
புதுடில்லி : 'நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்' என முன்னாள் குடிமைப் பணியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.முன்னாள் அமைச்சரவை செயலர் கே.எம்.சந்திரசேகர் சுகாதாரத்துறை செயலர் சுஜாதா ராவ் வெளியுறவுத்துறை செயலர் மற்றும் தேசிய பாதுாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உட்பட 116 முன்னாள் குடிமை
Free Vaccine, PM Modi, Modi, Vaccine

புதுடில்லி : 'நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட வேண்டும்' என முன்னாள் குடிமைப் பணியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரவை செயலர் கே.எம்.சந்திரசேகர் சுகாதாரத்துறை செயலர் சுஜாதா ராவ் வெளியுறவுத்துறை செயலர் மற்றும் தேசிய பாதுாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உட்பட 116 முன்னாள் குடிமை பணியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.


latest tamil news


அதன் விபரம்: இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ உதவி கேட்டு மக்களின் கதறல் அதை மிக அலட்சியமாக கையாளும் மத்திய அரசின் மனோபாவம் எங்களை கடுமையாக பாதித்துள்ளது. சர்வதேச சமூகம் நம் விஞ்ஞானிகள் எச்சரித்தும் இரண்டாம் அலைக்கு நாம் தயாராகவில்லை. முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையே போதிய இடைவெளி இருந்தும் மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனை படுக்கைள் ஆக்சிஜன் வென்டிலேட்டர் மருந்துகள் உள்ளிட்டவற்றை அதிகரிக்க அரசு தவறிவிட்டது.

தடுப்பூசி வினியோகத்தில் உலகின் முன்னோடியாக நாம் விளங்கினாலும் கையிருப்பு திட்டமிடுதலில் தவறு செய்துவிட்டோம். நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும். கிராமம் மற்றும் நகர்புறங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை பெரும் அளவில் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
22-மே-202123:09:54 IST Report Abuse
மதுரை விருமாண்டி எல்லாரும் ஆன்டி இந்தியர்கள்.. எல்லார் மேலேயும் தேசத்துரோக குற்றத்தில் வழக்கு போடுங்கள் மோடீ ஜீ .. உங்க பாணி அதானே..
Rate this:
Cancel
21-மே-202116:46:46 IST Report Abuse
ஆப்பு நீங்க வேற... தடுப்பூசியெல்லாம் தாண்டி, இப்போ பிரதமர் கரும்பூஞ்சை, வெள்ளை பூஞ்சையை கட்டுப்படுத்த போயிட்டிருக்கார்.
Rate this:
Cancel
21-மே-202115:12:32 IST Report Abuse
sakthi shanmugam இவர்களின் கோரிக்கையை பார்த்தால் காங்கிரஸ் B டீம் என்று எண்ணத்தோன்றுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X