சத்குரு மீது பொய் குற்றம்; அமைச்சருக்கு கண்டனம்

Added : மே 21, 2021 | கருத்துகள் (71)
Advertisement
மதுரை : 'சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும், தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:கோடிக்கணக்கான மக்கள், குருவாக ஏற்ற சத்குருவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவன், இவன் என பேசி, சில
சத்குரு, ஜக்கி வாசுதேவ், பழனிவேல் தியாகராஜன், ஹிந்து முன்னணி

மதுரை : 'சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும், தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:கோடிக்கணக்கான மக்கள், குருவாக ஏற்ற சத்குருவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவன், இவன் என பேசி, சில மாதங்களுக்கு முன் காணொலி வெளியிட்டதை மக்கள் கண்டுள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் துன்பப்படும் சூழலில், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யலாம், மூடப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு என்ன நிவாரணம் தரலாம் என யோசிக்காமல், ஈஷா, சத்குருவை சாடுவதும், கைதுசெய்வோம் என கூறுவதும் காழ்ப்புணர்வை காட்டுகிறது.

சத்குருவின் கோவில் அடிமை நிறுத்து கோரிக்கைக்கு மக்கள் வரவேற்பு அதிகரிப்பதை பொறுக்காத அமைச்சர், வாய்க்கு வந்ததை பேசுகிறார். எனவே, அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அவர் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
27-மே-202112:52:54 IST Report Abuse
பெரிய ராசு பழனிவேல் தியாகராஜ இந்திய குடிமகனா ?
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
27-மே-202106:32:18 IST Report Abuse
spr இவர் மேல் பல வழக்குகள் உள்ளது. நேர்மையான மனிதர் என்றால் ப சி போல வழக்குகளிருந்து விசாரணையே கூடாது என்று நீதிமன்றம் சொல்ல வைக்க வேண்டும் அதில் இவர் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்படாதவரை ஒருவரை குற்றவாளியென்று சொல்லக்கூடாது என்பது இன்றைய காலகட்டத்துக்குப் பொருந்தாது. காவற்துறை விசாரணை என்று நடந்து நீதிமன்றமும் விசாரித்தலே அவர் குற்றம் செய்திருக்கும் சாத்தியமுண்டு தன் செல்வாக்கால் தப்பலாம் அவ்வளவே நெருப்பில்லாமல் புகையாது வெள்ளியங்கிரிமலையை கலைஞர் மூலம் பெற்றது கூட விசாரிக்கப்பட வேண்டும் "யாரை எங்கே அடிச்சால் யாருக்கு எங்கே வலிக்கும்" என்று தெரிந்தவர்கள் கழக கண்மணிகள்
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
26-மே-202106:00:56 IST Report Abuse
meenakshisundaram என்னமோ போடா மாதவா ஆட்சிக்கு வந்தோம் .கமிஷன் அடிச்சோம்னு இல்லாமே இந்த வியாதி இன்னும் நீங்க லையே ?எப்போ மக்களை சந்திச்சு 'துட்டு 'கேக்க முடியும் ?அதுனாலதான் இது மாதிரி காசு பெறாத சமாச்சாரங்களை நாங்க கையிலே எடுத்திருக்கோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X