மதுரை : 'சத்குரு ஜக்கி வாசுதேவ் மீது பொய் குற்றம் சுமத்தும், தி.மு.க., அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:கோடிக்கணக்கான மக்கள், குருவாக ஏற்ற சத்குருவை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அவன், இவன் என பேசி, சில மாதங்களுக்கு முன் காணொலி வெளியிட்டதை மக்கள் கண்டுள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலையில் மக்கள் துன்பப்படும் சூழலில், அவர்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யலாம், மூடப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு என்ன நிவாரணம் தரலாம் என யோசிக்காமல், ஈஷா, சத்குருவை சாடுவதும், கைதுசெய்வோம் என கூறுவதும் காழ்ப்புணர்வை காட்டுகிறது.
சத்குருவின் கோவில் அடிமை நிறுத்து கோரிக்கைக்கு மக்கள் வரவேற்பு அதிகரிப்பதை பொறுக்காத அமைச்சர், வாய்க்கு வந்ததை பேசுகிறார். எனவே, அமைச்சருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதோடு, அவர் மீது முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE