பொது செய்தி

இந்தியா

20 கோடி கூடுதல் கோவாக்சின் தடுப்பூசிகள் உற்பத்தி: பாரத் பயோடெக் அறிவிப்பு

Updated : மே 21, 2021 | Added : மே 21, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், குஜராத்தில் உள்ள தங்களின் துணை நிறுவனம் மூலம் கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. விரைவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைக்க உள்ளது. இதில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் பக்க விளைவுகள்
Bharat Biotech, Covaxin, ManufacturingCapacity, Produce, 200MillionDoses, பாரத் பயோடெக், கோவாக்சின், கொரோனா, தடுப்பூசி, உற்பத்தி

ஐதராபாத்: கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், குஜராத்தில் உள்ள தங்களின் துணை நிறுவனம் மூலம் கூடுதலாக 20 கோடி தடுப்பூசிகள் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் போடப்படுகின்றன. விரைவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி கிடைக்க உள்ளது. இதில் உள்நாட்டு தயாரிப்பான கோவாக்சின் பக்க விளைவுகள் மிகவும் குறைந்த ஒன்றாக உள்ளது. கோவிஷீல்டை போன்றே உருமாறிய கொரோனா வைரஸ்களையும் எதிர்கொள்ளும் திறன் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இந்நிலையில் கோவாக்சினை உற்பத்தி செய்வதற்கான வளங்களை அதிகரித்துள்ளதாக பாரத் பயோடெக் நேற்று (மே 20) அறிக்கை வெளியிட்டது.


latest tamil news


குஜராத்தின் அங்கலேஷ்வரில் அமைந்துள்ள அதன் துணை நிறுவனத்தில் நான்காம் காலாண்டு முதல் உற்பத்தியை தொடங்க உள்ளது. ஆண்டுக்கு 20 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஆலை மட்டுமின்றி பெங்களூரு, ஐதராபாத்திலும் கோவாக்சின் உற்பத்தி செய்யப்படுகிறது. நிதி ஆயோக் உறுப்பினரான வி.கே.பால் கடந்த வாரம் அளித்த பேட்டியில், இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 200 கோடி தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என தெரிவித்திருந்தார். தற்போது 20 கூடுதல் கோவாக்சின்கள் மூலம் அந்த இலக்கை எட்டுவது எளிதாகும்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-மே-202112:36:34 IST Report Abuse
chandran, pudhucherry . எங்க ஜெகத் பேக்டரில தயாரிக்க முடிவெடுத்திருக்கிறோம். ஒரு டோஸ் ஆயிரம் ரூவா. என்ன போட்டுகிட்டா கிக்கா இருக்கும்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
21-மே-202112:05:00 IST Report Abuse
Sivagiri அமெரிக்க ஐரோப்பிய தடுப்பூசி கம்பெனி முதலாளிகள் உலக அளவில் பணக்காரர்கள் ஆகி விட்டார்களாம் - ஐயோ பாவம் இவர்கள் - புண்ணியம் மட்டும் கிடைத்தால் போதும் என்று இருக்கிறார்கள் போல.., அமேரிக்காகாரன் போல ஒரு டோஸ் ஏழாயிரம் ரூபாய் (வாங்கி விற்கும் ஏஜெண்டுக்கு கமிஷன் ரெண்டாயிரம் - ஆஸ்பத்திரிக்கு கமிஷன் ரெண்டாயிரம் - அரசியல்வாதிக்கு ரெண்டாயிரம் கமிஷன்) என்று சொல்லி விற்றால் இந்நேரம் இவர்கள்தான் நம்பர்ஒண் - - -
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-மே-202110:29:42 IST Report Abuse
Darmavan அமெரிக்காக்காரன் நம் சுதேசி மருந்து புதிய வைரசையும் அழிக்கிறது என்றவுடன் தேச துரோகிகளுக்கு சீன கைக்கூலிகளுக்கு எதிர்க்க முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X