அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி தான் நீங்கள் சொல்வதற்கான உதாரண புருஷர்

Updated : மே 21, 2021 | Added : மே 21, 2021 | கருத்துகள் (61)
Share
Advertisement
எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையிலும், வளர்ச்சிக்கான ஒரு புதிய வாய்ப்பினை பார்ப்பவரே நல்ல தலைவர். அந்த வகையில், கொரோனா நோய் தொற்றை தமிழகத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற, மாநிலத்திலேயே மருந்து உற்பத்திக்கு முயற்சிக்கும் முதல்வருக்கு பாராட்டுகள்.- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்'அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த இ.பி.எஸ்., தான் நீங்கள்
அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமி தான் நீங்கள் சொல்வதற்கான உதாரண புருஷர்

எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்னையிலும், வளர்ச்சிக்கான ஒரு புதிய வாய்ப்பினை பார்ப்பவரே நல்ல தலைவர். அந்த வகையில், கொரோனா நோய் தொற்றை தமிழகத்தின் வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற, மாநிலத்திலேயே மருந்து உற்பத்திக்கு முயற்சிக்கும் முதல்வருக்கு பாராட்டுகள்.
- தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ்


'அ.தி.மு.க., ஆட்சியில் முதல்வராக இருந்த இ.பி.எஸ்., தான் நீங்கள் சொல்வதற்கான உதாரண புருஷர்... எங்கும் எதிர்ப்பு, எதற்கும் எதிர்ப்பை சந்தித்தவர், எதிர்நீச்சல் போட்டு, கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தார்... அப்போது நீங்கள் பிடில் வாசித்துக் கொண்டிருந்தீர்கள் போலிருக்கு...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை.



கொரோனா நிவாரணம் முதல் தவணையாக, 2,000 ரூபாய், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதில், மாற்றுத்திறனாளிகள் இடம் பெற்றுள்ள குடும்பங்களுக்கு 25 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும்.
- தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி


'மாற்றுத் திறனாளிகளுக்கு இந்த நேரத்தில் இன்னும் நிறைய செய்ய வேண்டும்...' என, ஆதரவு தெரிவிக்கத் தோன்றும் வகையில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி அறிக்கை.



தமிழகத்தில் நகரங்களில் மட்டுமின்றி, கிராமப்புறங்களிலும் கொரோனா பெருந்தொற்று தினசரி வேகமாக பரவி, அதிகமான கிராமப்புற மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கிராமப்புறங்களில் நடமாடும் மருத்துவமனைகளை துவக்கி, நோயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
- மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன்


latest tamil news




'நகரங்களிலும் நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட வேண்டியது அவசியம் தான். நோய் தொற்று அதிகம் காணப்படும் இடங்களில் சிகிச்சை மையங்களை துவக்க வேண்டும்...' எனக் கூறத் துாண்டும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை.



கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன. அதுபோல, அரசின் பல நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லும் கூட்டுறவு துறையினரையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.
- கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன்


'எல்லா துறையினரையும் அவ்வாறு அறிவித்து விட்டால், சலுகைகள் யாருக்கும் கிடைக்காமல் போய் விடுமே...' என, நினைவுபடுத்த தோன்றும் வகையில், கூட்டுறவு துறை ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் அறிக்கை.



தமிழக கல்வி அமைச்சர் மகேஷ், திருச்சி தி.மு.க., அலுவலகத்தில் எஸ்.பி., கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதுபற்றி விவாதம் ஏற்பட்டதும், பாராட்டு தெரிவிக்க அதிகாரிகள் வந்தனர் என்கிறார். உண்மையை சொல்ல வேண்டியது அதிகாரிகள் தான்.
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி


'யார் பதில் சொல்லி என்ன ஆகப் போகிறது. இதெல்லாம் தமிழகம் எதிர்பார்த்தது தானே...' என, விரக்தி தெரிவிக்க தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.


Advertisement


வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
22-மே-202115:05:04 IST Report Abuse
meenakshisundaram சொன்னாலும் சொல்லாவிட்டாலும் விளம்பரம் செய்யவில்லை என்றாலும் இப்போது உள்ள நாட்டு நிலைமையில் பழனிசாமி அவர்களின் திறனும் சேவையும் மிக மிக சிராப்பை இருந்தது (நான் எந்த கட்சியும் அல்ல).தாமிழக மக்களின் கருப்பு காலம் ஆரம்பித்து விட்டது .ஏனென்றால் எல்லா பழியும் பொறுப்பும் இப்போது மக்களிடமே என்னு சொல்லத்தொடங்கிவிட்டார்கள் ஆட்சியாளர்கள் .கொடுக்கும் இரண்டாயிரத்தில் ஐநூறு எடுத்துக்கொண்டவர்கள் என்று சில அதிகாரிகளை பற்றி செயதிகள் வருகின்றன .ரேஷன் கடைகளில் கட்சிக்காரர்கள் தங்கள் பணத்தை மக்களுக்கு தானம் செய்வதேபோல நடந்து கொண்டுள்ளார்கள் .இப்போது ஒன்றும் புதிதாக அதிகாரிகள் வந்து விட வில்லை .ஏற்கனேவே இருந்த அதிகாரிகள் தான் இவ்வாறு நடந்து கொண்டது குறிப்பிடுவது என்னவென்றால் -என்ன செய்தலும் மேலே ஆளும் கட்சி கண்டுகொள்ளாது .மிஞ்சிப்போனால் கொஞ்சம் பங்கு வாங்கிக்கொண்டு விட்டு விடுவார்கள் என்பதே போல.ஒய்வு பெட்ர தலைமை நீதிபதி கட்ஜு சொன்னது -தமிழக மக்கள் சூடான சட்டியில் இருந்து அடுப்பில் குதித்து விட்டார்கள் .உண்மைதானோ ?காலம் பதில் சொல்லும்
Rate this:
Cancel
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு பீட்டர் அல்போன்ஸ் ஒரு சாம்பிராணி தூக்கு என்பதும் அவர் சுடாலின்க்கு தூபம் போடத்தான் லாயக்கு என்பதும் ஊர் அறிந்த உண்மை. அதனால்தான் அவருக்கு தமிழ காங்கிரஸ் தலைவர் பதவி வரவில்லை என்பதும் உண்மை.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
21-மே-202119:17:14 IST Report Abuse
vbs manian உங்கள் ஊரில் நான் இப்போது ஏன் இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X