பொது செய்தி

இந்தியா

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா காலமானார்: தலைவர்கள் இரங்கல்

Updated : மே 21, 2021 | Added : மே 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
ரிஷிகேஷ்: சுற்றுச்சூழல் போராட்டங்களின் முன்னோடி சுந்தர்லால் பகுகுணா கொரோனாவில் உயிரிழந்தார். சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா, 94, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இன்று பகல் 12:00 மணியளவில் சிகிச்சை

ரிஷிகேஷ்: சுற்றுச்சூழல் போராட்டங்களின் முன்னோடி சுந்தர்லால் பகுகுணா கொரோனாவில் உயிரிழந்தார்.latest tamil newsசுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா, 94, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 8ம் தேதி ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், இன்று பகல் 12:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

latest tamil newsஉத்தரகாண்ட் மாநில தெகிரி எனும் கிராமத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்லால் பகுகுணா மரங்கள், காடுகளைக் காக்க தொடர்ந்து பல்வேறு இயக்கத்தை முன்னெடுத்தவர். தனது 13வது வயதிலிருந்து சுதந்திரப் போராட்டங்களில் பங்கெடுத்தவர். 1973ம் ஆண்டு மரங்களைக் காக்க உத்தரகண்ட் சமோலி பகுதியில் பெண்கள் முன்னெடுத்த 'சிப்கோ' இயக்கத்தை தொடங்கி வைத்தவர். இவரது தொடர் போராட்டங்களால், 1980ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, மரங்களை வெட்டுவதற்கு தடை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vivek c mani - Mumbai,இந்தியா
22-மே-202110:14:31 IST Report Abuse
vivek c mani பணம் எப்படியாகிலும் சம்பாதிக்க வேண்டும் எனும் நிலை கொண்டோர் பெருகும் நேரத்தில், தாவரங்களை , வாய்பேசா ஜீவன்களை மற்றும் சுற்று சூழலை காக்க வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்டவர் பகுகுணா அவர்கள். அவர் இறப்பு , வருந்தத்தக்கது. அன்னாரின் இயற்க்கையோடு ஒட்டி வாழும் வாழ்க்கை தத்துவங்களை பரப்புதல் அவசியம். ஓம் ஷாந்தி.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-மே-202109:41:02 IST Report Abuse
vbs manian மரங்களை கட்டி தழுவி காப்பாற்றி இயற்கையோடு இயற்கையாக தன்னை இணைத்து கொண்ட அபூர்வ மனிதர்.
Rate this:
Cancel
Kavi - Karur,இந்தியா
22-மே-202101:46:50 IST Report Abuse
Kavi உங்கள் சேவை மகத்தானது. ஒவ்வருவரும் தன்னால் இயன்றவரை இயற்கையை பாதுகாத்து, சுத்தமாக வைக்க வேண்டும். இயற்கையே நம்மளை காக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X