பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லா ஊரடங்கு

Updated : மே 22, 2021 | Added : மே 21, 2021 | கருத்துகள் (69)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது ஆனால் கட்டுக்குள் வரவில்லை. வரும் காலங்களில் கொரோனா உச்சத்தை தொடவிருப்பதால் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று முதல்வர் ஸ்டாலின் காலையில் தலைமை செயலகத்தில் மருத்துவ

சென்னை: தமிழகத்தில் கொரோனா குறைந்து வருகிறது ஆனால் கட்டுக்குள் வரவில்லை. வரும் காலங்களில் கொரோனா உச்சத்தை தொடவிருப்பதால் மேலும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. எனவே இன்னும் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று முதல்வர் ஸ்டாலின் காலையில் தலைமை செயலகத்தில் மருத்துவ குழுவினருடனும், தொடர்ந்து அனைத்து சட்டசபை உறுப்பினர்களிடமும் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் பேசுகையில்; கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. பரவல் குறைந்தாலும் கட்டுக்குள் இல்லை. கொரோனா மே மாத இறுதி, ஜூன் மாத துவக்கத்தில் கொரோனா மேலும் உச்சத்தை தொடும். மாநிலத்தில் மளிகை கடை மட்டும் திறந்து கொள்ள அனுமதி அளித்தது அரசு. ஆனால் தளர்வுகளை சிலர் தவறாக பயன்படுத்தி ஊர் சுற்றி வருகின்றனர். விடுமுறை காலம் போல் மக்கள் வெளியே சுற்றுகின்றனர் . மக்கள் நலனுக்காகவே ஊரடங்கு. தளர்வுகள் அற்ற ஊரடங்கே நல்லது என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் தமிழகத்தில் வரும் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளார்.
முழு ஊரடங்கு தொடர்பான முழு விவரங்களை படிக்க: https://www.dinamalar.com/news_detail.asp?id=2772143தமிழகத்தில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. நாட்டில் நோய் பரவல் அதிகம் உள்ள மாநிலமாக, தமிழகம் உள்ளது. குணமடைவோர் எண்ணிக்கையை விட, நோய் பாதிப்புக்கு ஆளாகுவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக, மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கை தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருந்து தட்டுப்பாடு என தமிழகம் திணறி வருகிறது. நோய் பரவலை கட்டுப்படுத்த, 10ம் தேதி காலை 4:00 முதல் 24ம் தேதி காலை 4:00 மணி வரை, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக, 15ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. தினசரி காலை 10:00 மணி வரை, மளிகை, காய்கறி, பழக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது; மற்ற கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஊரடங்கு குறித்து கவலைப்படாமல் மக்கள் அதிக அளவில் வெளியே சென்று வருகின்றனர். தினமும் காய்கறி, மளிகை வாங்க, கடைகளில் குவிகின்றனர். இதனால், நோய் பரவல் குறையாமல் அதிகரித்தபடியே உள்ளது.
எனவே, மக்கள் வெளியில் வராதபடி முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 10ம் தேதி அரசு அறிவித்த கட்டுப்பாடுகள், நாளை மறுதினம் காலை காலாவதி ஆகின்றன.எனவே, கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு செய்வதற்காக, இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தளர்வுகளின்றி ஊரடங்கை அமல்படுத்துவதற்கான உத்தரவு வெளியிடப்பட்டது.


கொரோனா தடுப்பு: தவிக்கிறதா தமிழக அரசு?


தமிழகத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், எவ்வாறு தடுப்பது என தெரியாமல், அரசு தவிக்கிறதோ என்ற அச்சம், அனைத்து தரப்பு மக்களிடமும் ஏற்பட்டுள்ளது.

* கடந்த ஆண்டு மாநிலம் முழுதும், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, சாலைகளில் மக்கள் நடமாட்டமே இல்லை. தொற்று உறுதியானவர்களை, சுகாதார துறையினர் ஆம்புலன்சில் வந்து, மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தனி அறையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்று பாதித்தவர்களை பார்க்க, யாரும் அனுமதிக்கப்படவில்லை.

* நோய் கட்டுப்பாட்டு பகுதியில், தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, 14 நாட்களுக்கு யாரும் உள்ளே செல்லவோ, வெளியே வரவோ முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது.
* சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டோர், நோய் பாதிப்பு குறைந்ததும், கொரோனா பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டனர். அங்கு, ஒரு வாரம் இருந்த பின் வீடு திரும்பினர்.

* சுகாதார துறை, வருவாய் துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை அதிகாரிகள், பாதிக்கப்பட்டோரை தொடர்பு கொண்டு, அவரோடு தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்தனர். அவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொண்டனர். இது, நோய் பரவலை கட்டுப்படுத்த பெரிதும் உதவியாக இருந்தது எல்லாம் குழப்பம்.

* தற்போது, இந்த நடைமுறை எதுவும் பின்பற்றப்படவில்லை. நோய் அறிகுறி இருந்தால், உடனே மருத்துவமனைக்கு செல்லும்படி, அரசு அறிவுறுத்துகிறது. மருத்துவமனைக்கு செல்வோர், மூன்று மணி நேரம் காத்திருந்து, ரத்த பரிசோதனை உட்பட, பல பரிசோதனைகளை மேற்கொண்டாலும், பெரும்பாலானவர்களை படுக்கை வசதி இல்லை என்று கூறி, வீட்டிற்கு அனுப்புகின்றனர்
.

* இதனால், வீட்டில் இருப்போருக்கும் தொற்று பரவுகிறது. நோய் தொற்றுக்கு ஆளானவர்களை அழைக்க, சுகாதார துறையினர் வருவதில்லை.

* நோய் கட்டுப்பாட்டு பகுதியில் தடுப்பு ஏற்படுத்தி, 'கொரோனா பாதிக்கப்பட்ட பகுதி' என, பேனர் தொங்கவிட்டு செல்கின்றனர். மக்களோ தடுப்பை ஓரம்கட்டி விட்டு, சகஜமாக வெளியில் சென்று வருகின்றனர்.

* நோய் பாதிப்பு உள்ளோரின் வீடுகளில் வசிப்போர், சர்வ சாதாரணமாக வெளியில் சென்று வருகின்றனர். இது, நோய் பரவல் அதிகரிக்க உதவுகிறது.


* நோய் பரவலை தடுக்க, முன்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மக்களுக்கு கபசுர குடிநீர், 'அர்சானிக் ஆல்பம்' ஓமியோபதி மருந்து போன்றவை வழங்கப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தற்போது, எதுவும் இல்லை.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
23-மே-202108:56:48 IST Report Abuse
g.s,rajan The Government consult the Medical experts for announcing the Lock Down at the same time they must also consult the Economic experts hence every one of the people is reeling under economic crisis the economic conditions are going towards deep crisis ,the economic conditions needs to be strengthened ,they can advise and recomm the Central and State Governments to strictly pay the compensation for each and every family to give cash atleast up to rupees 10000 and the essential commodities worth rupees 5000 for one month during Lock Down. g.s.rajan Chennai.
Rate this:
Cancel
Raja -  ( Posted via: Dinamalar Android App )
22-மே-202123:26:16 IST Report Abuse
Raja politicians goibg around for opening ceremony of corona ward, with them lot of people including press were roaming, was this social distancing? How the ruler does the same way public is doing, no way to eliminate corona, people has to realise themself and change. politicians has to set example for social distancing not for gathering in the name of hospital visits. if politicians goes to hospital almost minimum 100 people are with them including allakais
Rate this:
Cancel
ரெட்டை வாலு ரெங்குடு - ரெட்டேரி ,இந்தியா
22-மே-202123:09:47 IST Report Abuse
ரெட்டை வாலு ரெங்குடு இதே ஒரு வருடம் ரிவைண்ட் செய்து பார்த்தீங்கன்னா ஒருவர் இதே கொரோனவை வைத்து மறைமுக பிற்போக்கு அரசியல் செய்ஞ்சு அரசியல் லாபம் அடைய நினைச்சாரு.. அவரு யாருன்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பு இல்ல ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X